• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகில் பெண்கள் மட்டும் வாழ்கின்ற அதிசய கிராமம் எது தெரியுமா..!

இந்த உலகில் பெண்களே இல்லையென்றால் எப்படியிருக்கும், ஆண்கள் இல்லாத உலகு எத்தகையதாக இருக்கும் என்றெல்லாம் மனிதர்கள் மத்தியில் விசித்திரமான கேள்விகள் எழுவது வழக்கம், ஆனால் அது உண்மையாக இருந்தால்?
ஆம், பெண்கள் மட்டுமே வாழக்கூடிய அதிசயமான கிராமமாக கென்யா நாட்டில் உள்ள ஒரு கிராமம் விளங்குகிறது.
உலகின் பாரம்பரிய தீவு ஆனால் செல்வது அவ்வளவு எளிதல்ல அந்த தீவு எதுவென்று தெரியுமா!
ஆண்களுக்கு தடை
ஆபிரிக்க நாடான கென்யாவில் உமோஜா எனும் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த அதிசய கிராமம் இன்றிலிருந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த கிராமத்தில் நுழைவதற்கு ஆண்களுக்கு தடை உள்ளதாக கூறப்படுகிறது.
இங்கு வசிக்கும் பெண்கள் அனைவரும் மாசாய் எனும் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருத்தப்படும் சம்பூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாவர்.
ஏன் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றால், பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லாததும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தான் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, பல சமயங்களில் இந்த கிராமத்தின் பெண்கள் வயது முதிர்ந்த ஆண்களுடன் குழந்தைத் திருமணங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு நில உரிமையோ, விலங்கு உரிமையோ இல்லாமல் இருந்துள்ளது.
1990களில் பிரித்தானிய இராணுவ வீரர்கள் சம்பூர் இனப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அப்பெண்களின் கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்துள்ளனர்.
குறிப்பிட்ட அளவிலான பெண்கள் தங்களின் குடும்பத்தாலும், கணவன்மார்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக வெகுண்டெழுந்த ரெபெக்கா லோலோசோலி என்ற பெண் 15 பெண்களுடன் சேர்ந்து உமோஜா கிராமத்தை நிறுவினார். தற்போது 40 குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

பாரம்பரிய மணி மாலைகளை விற்று வருமானம் ஈட்டி வருகின்றனர், ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையிலும் இந்த கிராமத்து பெண்கள் குழந்தை பெறுகின்றனர்.
எப்படி என்றால் உடல் உறவுக்காக கிராமத்தை விட்டு வெளியேறி விரும்பிய ஆணுடன் உறவு கொண்டு கர்ப்பம் தரிக்கிறார்கள்.
இவ்வாறிருக்கையில், அவ்வப்போது இந்த கிராமத்திற்கு அருகில் வசிக்கும் ஆண்களால், இப்பெண்களின் கால்நடைகள் திருடப்படுகிறது, இருந்த போதிலும் உமோஜா பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர்.  

நன்றி ஐபி சி தமிழ்

Leave a Reply