• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உடல் ரீதியாக டைகர்- 3 எனக்கு மிகவும் சவாலான படம்- கத்ரீனா கைஃப்

சினிமா

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'டைகர் 3' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கத்ரீனாவின் சோலோ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இது குறித்து கத்ரீனா கூறியதாவது, ஜோயா, ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி, அதுபோன்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவள் கொடூரமானவள், அவள் தைரியமானவள், அவள் நல் இதயம் கொண்டவள் , அவள் விசுவாசமானவள், அவள் பாதுகாவலர், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் மனிதகுலத்திற்காக ஒவ்வொரு முறையும் முன் வருகிறார் .

ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸில் ஜோயாவாக நடித்தது ஒரு நம்பமுடியாத பயணம் மற்றும் ஒவ்வொரு படத்திலும் நான் என்னை சோதனைக்கு உட்படுத்தினேன், இதற்கு டைகர் 3 விதிவிலக்கல்ல. இந்த முறை ஆக்ஷன் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினோம், படத்திற்காக எனது உடலை பிரேக்கிங் பாயிண்டிற்கு தள்ளியுள்ளேன், மக்கள் அதை பார்ப்பார்கள். உடல் ரீதியாக இது எனக்கு மிகவும் சவாலான படம்.

எப்போதும் ஆக்ஷன் செய்வது உற்சாகமாக இருக்கும், நான் எப்போதும் போல் ஆக்ஷன் வகையின் ரசிகை . அதனால், ஜோயாவாக நடிப்பது எனக்கு ஒரு கனவு. வலிமையான, தைரியமான வேடம் ஏற்றேன் சோயாவை திரையில் பார்க்கும்போது மக்கள் என்ன எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
 

Leave a Reply