• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இசையமைபபாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மகளும் பவுன்ஸ் நிர்வாக மேலாளருமான லதா மோகன்.

சினிமா

அப்போது நான் சலூன் வைக்கிறேன் என்ற போது, அதை பார்த்ததே வித்தியாசமாக இருந்தது. இந்த தொழிலை ஏன் எடுத்து பண்றீங்க என்று கேட்டார்கள்.
மறைந்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் மகளும், பவுன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக மேலாளருமான லதா  மோகன் யூடியூப் ஒன்றுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
அப்பாவும்-கண்ணதாசன் சாரும் ரொம்ப க்ளோஸ். ராத்திரி வீட்டுக்கு வந்த பிறகும் அப்பா போனில் பேசிக் கொண்டே இருப்பார். ‘கவிஞர் உடன் தான் பேசிக் கொண்டிருக்கிறார்’ என்று அம்மா என்னிடம் கூறுவார்.  வீட்டில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் கண்ணதாசன் ஐயா வீட்டுக்கு வருவார். அவங்க ரெண்டு பேரும் பேசிப்பாங்க. 
அவர்கள் இருவருக்குள்ளும் ஒருவித புரிதல் இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்துக் கொள்வார்கள். என்னுடைய கல்யாணம் தான் குடும்பத்தில் முதல் நிகழ்ச்சி. என்ன செய்ய வேண்டும் ,எப்படி செய்ய வேண்டும் என்று எல்லா விசயங்களையும் கவிஞரிடம் சென்று ஆலோசித்த பிறகு தான் அப்பா செய்தார். 
கவிஞர் இல்லாமல் எதுவுமே இல்லை என்று அப்பா தீர்க்கமாக நம்பினார். கவிஞரும் அப்படி தான் நம்பினார். தினசரி எங்கள் வீட்டுக்கு கவிஞர் வரமாட்டார் என்றாலும், அப்பாவின் அன்றாட நிகழ்வுகள் எல்லாமே கவிஞருக்கு தெரிவிக்கப்படும்.
வேறு ஒரு கவிஞர் எழுதிய பாடல்கள் குறித்து கூட கவிஞரிடம் அப்பா தெரிவிப்பார். இன்றும் அவர்களுக்குப் பின்னால் குடும்ப ரீதியாக இருவரின் குடும்பங்களும் ஒன்றாக இருக்கிறோம். சலூன் தொழில் நான் தொடங்கிய போது, ‘இதனால் லாபம் வருமா?’ என்று அப்பா கேட்டார். ‘லாபம் வராமல் நான் அகலக்கால் வைக்கமாட்டேன்’ என்று அவரிடம் கூறினேன். 
400 பேர் உன்னிடம் வேலை செய்கிறார்களா, வெரி குட், அவர்களுக்கு நீ வாழ்க்கை கொடுக்குற, அது தான் சந்தோசம்; நீ எவ்வளவு சம்பாதிக்கிற என்பது முக்கியமில்ல’ என்று அப்பா கூறுவார். எப்போதுமே உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களை நண்பர்களாக பாவியுங்கள், கண்டிப்பாக தொழிலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். 
அப்போ நான் சலூன் வைக்கிறேன் என்ற போது, அதை பார்த்ததே வித்தியாசமாக இருந்தது. இந்த தொழிலை ஏன் எடுத்து பண்றீங்க என்று கேட்டார்கள். இந்த தொழிலை நன்றாக செய்பவர்களும் இருக்கிறார்கள், மோசமாக செய்பவர்களும் இருக்கிறார்கள். பெண் போலீசார் எல்லாம் எனக்கு வாடிக்கையாளராக இருக்கிறார்கள் என்றால் , என் தொழில் மீது நம்பிக்கை தான் காரணம். 
என் குரல் ,எனது அப்பா குரல் போலவே இருக்கும். அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தார். சாப்பிட முடியவில்லை. நான் கதவை பூட்டிவிட்டு, ‘இப்போ நான் பாட போறேன்’ என்று கூறுவேன், ‘அய்யோ.. லதாம்மா பாடாதம்மா.. வேண்டாம்மா… நான் சாப்பிடுறேன்’ என்று கூறி சாப்பிட்டு விடுவார்.

வீட்டில் ஏதாவது கொண்டாட்டம் என்றால் நாங்கள் எல்லாரும் சேர்ந்து அந்தாக்‌ஷரி மாதிரி பாடுவோம். ‘நீங்கள் எல்லாம் சுமாரா பாடுறீங்களே, உங்க எல்லாத்தையும் யூஸ் பண்ணாமவிட்டுடேட்டேனே…’ என்று கிண்டலடிப்பார். என் அப்பாவிடம் ஒரு கேள்வி கேட்டால் அதை 10 முறை கேட்பார். அவரைப் போல தான் நானும் இருப்பதாக என் குழந்தைகள் சொல்கிறார்கள். 
அப்பா ரொம்ப குழந்தை மாதிரி. வீட்டில் அவர் பண்ற ரகளை தாங்க முடியாமல், என் அம்மா சிரித்துக் கொண்டே இருப்பார். ‘ஏன்ம்மா இப்படி எல்லாத்துக்கும் சிரிக்கிற, அப்பா கோபம் படப்போகிறார்’ என்று நான் கேட்பேன். ‘என்னடி பண்றது, அவர் பண்ற கோமாளிதனத்தில் சிரிக்காம இருக்க முடியல’ என்று அம்மா கூறுவாங்க. 
தன்னோட அம்மா இறந்த பிறகு தான் அப்பா உடைஞ்சு போய் பார்த்தோம். சில மாதங்கள் அவர் அவராவே இல்ல. மனதளவில் பயங்கரமா உடைஞ்சு போயிருந்தார். அந்த அளவிற்கு அவருக்கு பாட்டியோட மரணம் பாதிப்பு தந்தது. ‘நான் தான் நல்லா பாடுறேனே.. எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க’ என்று அப்பாவிடம் கேட்டேன். ‘நானே வாய்ப்பில்லாமல் இருக்கேன்… நான் எங்கே உனக்கு 
வாய்ப்பு கொடுக்கிறத? வேண்டுமானால் ஒரு கேசட் போடு’ எனறு அப்பா என்னிடம் சொன்னார்,’’
என்று லதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Prashantha Kumar

Leave a Reply