• Welcome to TamilsGuide
செய்திகள் 1

12.3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையில் உள்ளதாக தகவல்

இலங்கை

நாட்டின் 12 தசம் 3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையை எட்டியுள்ளதாக 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான பல பரிமாண இடர் குறியீட்டின் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பாட்டளி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது.

2022-23 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு எனப்படும் பல பரிமாண இடர் குறியீட்டின் அடிப்படையில் கொள்கை அறிக்கையின் மீது இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒவ்வொரு 10 பேரில் 6 பேர் அபாயகரமான பொருளாதார நிலையை எட்டியுள்ளதாகவும் அது 55.7 வீதமாக காணப்படுவதாகவும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், கிராமப் பகுதிகளில் இது 82மூ வரை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல், கொரோனா தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை, கொடுப்பனவு சமநிலை நெருக்கடி மற்றும் கடன் பொறுப்புகள் இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கான முறையான மற்றும் வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பைத் தயாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply