• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவில் பணத்துக்காக 1 லிட்டர் மதுபானத்தை குடித்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்

சீனாவில் அலுவலக பார்ட்டியில் 2 லட்சம் ரூபாயை வெற்றி பெறுவதற்காக 1 லிட்டர் மதுபானத்தை குடித்த நபர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சீனாவில் ஜாங்(Zhang) என்ற ஊழியர் தன்னுடைய அலுவலகம் குழு மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்து வைத்து இரவு உணவு விருந்திற்கு சென்றுள்ளார்.  

அப்போது ஜாங் தனது மதுபான கிளாஸை ஏந்தியபடி, யாராவது தன்னை விட அதிகமாக குடிக்க முடிந்தால் 5000 யுவான் தர தயாராக இருப்பதாக அறிவித்தார்.

ஆனால் அதற்கு யாரும் பதிலளிக்காததை தொடர்ந்து தான் அறிவித்த தொகையை 10,000 யுவானாக(அதாவது 1.15 லட்சம்) மாற்றி அறிவித்தார்.

இதையடுத்து நிறுவனத்தின் முதலாளியான யாங் போட்டியை அறிவித்தார். இந்த போட்டியில் ஜாங் வெற்றி பெற்றால் அவருக்கு 20,000 யுவான்(2,28,506 லட்சம் ரூபாய்) வழங்குவதாக அறிவித்தார்.

மேலும் இந்த போட்டியில் ஜாங் தோற்றுவிட்டால் மொத்த நிறுவன ஊழியர்களுக்கும் தேநீர் விருந்து அளிக்க 10,000 யுவான்களை கொடுக்க வேண்டும் என யாங் நிபந்தனை விதித்தார். இந்த போட்டியில் ஜாங்கிற்கு எதிராக சில ஊழியர்களையும், அவரது சொந்த கார் சாரதியையும் யாங் களமிறக்கினார்.

எனவே இந்த போட்டியில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்று ஜாங் 10 நிமிடத்தில் 30% முதல் 60% சதவீதம் ஆல்கஹால் உள்ள Baijiu மதுபானம் 1 லிட்டரை குடித்து முடித்துள்ளார்.

இதனால் நிலைகுலைந்து விழுந்த ஜாங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பின்னர் அவர் நிமோனியா, மூச்சுத் திணறல் மற்றும் இதயத் தடுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 3ம் திகதி உயிரிழந்துள்ளார்.

நிறுவன ஊழியர்களிடையே மதுபான போட்டி கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மூடப்பட்டதோடு இந்த சம்பவம் குறித்து ஷென்சென் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Reply