• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்த ஐவரால் உலகம் அழிவின் விளிம்பில்... உலக மக்களையும் சேர்த்து மோசமாக விமர்சித்த நிபுணர்

உலகின் பிரபலமான இந்த ஐந்து தலைவர்களால் உலகம் அழிக்கப்படும் அபாயம் உள்ளது என்று கணிதவியலாளர் ஒருவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய- உக்ரைன் போர் எப்போது துவங்கியதோ அப்போதே உலகம் அணுஆயுத போருக்கு மிக அருகாமையில் நெருங்கிவிட்டதாக கூறும் அந்த கணிதவியலாளர், பொதுமக்களையும் சாடியுள்ளார்.

பெரும்பாலான மக்கள், தாங்கள் ஆபத்தின் விளிம்பில் இருக்கிறோம் என்பதை உணரவே இல்லை எனவும், நவீன உலக கேளிக்கை கொண்டாட்டங்கள் மட்டும் போதும் என்ற மன நிலையில் மக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணிதவியலாளரும் பொருளாதார நிபுணருமான Eric Weinstein தெரிவிக்கையில், உலகம் அழிவின் விளிம்பில் இருப்பதை பெரும்பாலான மக்கள் போதுமான அளவு கருத்தில்கொள்ளவில்லை என்ற அச்சம் உள்ளது என்றார்.

மட்டுமின்றி, மக்கள்தொகையில் ஒரு பெரிய சதவீதம் அணுஆயுத போர் சாத்தியமில்லை என்று நம்புகிறார்கள் என்றார்.

மேலும், ஒப்பீட்டளவில் வேறுபாடற்ற அமெரிக்காவின் ஜோ பைடன், ரஷ்யாவின் விளாடிமிர் புடின், உக்ரைனின் ஜெலென்ஸ்கி, சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் வடகொரியாவின் கிம் ஜோங் உள்ளிட்ட இந்த ஐந்து தலைவர்களால் உலக மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல் நீடிக்கிறது என்றார்.

நவீன உலக கேளிக்கைகளில் மூழ்கி இருக்கும் மக்கள், அவர்களை அறியாமலே மெல்ல மெல்ல ஆபத்தை நோக்கி நகர்கிறார்கள் எனவும் எரிக் வெய்ன்ஸ்டீன் அம்பலப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் போரைக் கூட மக்கள் உலக அழிவிற்கான அச்சுறுத்தலாக கருதாமல், வெறும் செய்தியாக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள் எனவும், உலக ஊடகங்கள் வெளிப்படுத்த மறுக்கும் மிகக் கொடூரமான காட்சிகள் உக்ரைனில் நாள் தோறும் நடந்தேறுவதாகவும், இரண்டாம் உலகப் போரின் முடிவில் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a Reply