• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செனல் 4 விவகாரம் - அதிரடித் தகவலை வெளியிட்டார் சரத் கொங்கஹகே

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக செனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்காக தன்னிடம் இருந்து நேர்காணல் ஒன்று பெறப்பட்டதாக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் தூதுவர் சரத் கொங்கஹகே (Sarath Kongahage) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “தற்போது இலங்கையிலுள்ள ஊடகம் ஒன்றில் பணியாற்றும் இங்கிலாந்து குடிமகன் ஒருவர் இந்த நாட்டில் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் எனக்கு அழைப்பினை ஏற்படுத்தி என்னிடம் நேர்காணல் ஒன்றை பெற வேண்டும் என கூறினார். அப்போது நான் கேட்டேன் எந்த செனல் என்று அதற்கு லண்டன் ஐ டி என் என்று பதிலளித்தார்கள்.

இரண்டு வெள்ளையர்கள் என்னுடைய வீட்டுக்கு பொய் சொல்லி வந்தார்கள். இந்த தாக்குதல் முற்றிலுமாக செயற்பாடானது ஐ ஏ எஸ் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் செயற்பாடு என்று நான் கூறினேன். ராஜபக்சர்கள் ஜனாதிபதி தேர்தலை வென்றது எவ்வாறு என்று என்னிடம் கேட்டார்கள். நான் கூறினேன் அவர்கள் மக்களின் ஆதரவை பெற்ற தலைவர்கள் என்று. இவர்கள் செனல் 4 என்பதை மறைத்து என்னிடம் நேர்காணலை பெற்றார்கள்.

இந்த தாக்குதல் தொடர்பான அனைத்து காணொளிகளும் இலங்கையிலுள்ள ஒரு தொலைக்காட்சி ஊடகத்தினூடாகவே வழங்கப்பட்டுள்ளன. என்னுடைய கதையை முற்றிலுமாக திரிபுபடுத்தியுள்ளார்கள்” இவ்வாறு சரத் கொங்கஹகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply