• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரிவினைவாதம் ஒன்றே இந்த நாட்டை அழிக்கும்! - சஜித்

இலங்கை

”பிரிவினைவாதம் ஒன்றே இந்த நாட்டை அழிக்கும் என்பதனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து  செயற்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”.ஜனாதிபதி கதிரைக்கு செல்லும் ஆசையில் முழு நாட்டையும் துண்டு துண்டாக உடைத்து தேசிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அவர்கள் அழித்துச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதி கனவுக்காக,யுத்த வெற்றியின் பின்னர் அனைத்து இனங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து ஒரு நாடாக அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக இனவாதத்தைக் கிளறிவிட்டனர்

தவறாக  அறுவை சிகிச்சைகள் செய்ததாகக் கூறி வைத்தியர் சாபி இடைநீக்கம் செய்யப்பட்டார்.  கொரோனா காலத்தில் தகனமா அடக்கமா என்ற பிரச்சினை வந்த போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களைக் கூட மறந்து விட்டு செயற்பட்டனர் இதன்போது, வீதிகளில் இறங்கி குரல் எழுப்பியது ஐக்கிய மக்கள் சக்தியே.

ஐக்கிய மக்கள் ஆட்சியில் இன,மத முரண்பாடுகளை உருவாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

கடந்த வெள்ளிக்கிழமை, மக்களை வாழ வைப்பதா அல்லது மக்களை மயானத்திற்கு அழைத்துச் செல்வதா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை 225 பேருக்கும் ஏற்பட்ட போது,மக்களை வாழ வைக்க 74 பேர் மாத்திரமே நின்றனர். 134 அடிமைகள் மக்களைக் கொல்லும் பக்கமே நின்றனர்.

அமைச்சுப் பதவிக்கு ஆசைப்படும் அரசியல் தவளைகள் இந்த அரசியல் களத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்,அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களின் சடலங்களுக்கு மேல் சென்று அரசாங்கத்தை கைப்பற்றினர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார் இதற்கு இதுவரையில் எந்த நீதியும் நிலைநாட்டப்பட்டதாக இல்லை.

இதில் உண்மை மறைக்கப்பட்டு,பொய் ஆட்சி செய்தது. ,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் வெளிக்கொணரும் வகையில் விசாரணை நடத்தப்படும் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தார்.
 

Leave a Reply