• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பில்அரசாங்க ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்

கனடா

கனடாவில் அரசாங்க ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கனடிய மத்திய அரசாங்கத்தினால் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அரசாங்க பணியாளர்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாட் ஜீபிடி (ChatGPT) உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்துவது தொடர்பில் இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி சபையின் தலைவர் அனிதா ஆனந்த் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் பொறுப்புடன் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதனை உறுதி செய்யும் நோக்கில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

ஒடுக்கு முறைகள் தொடர்பான பிரச்சனைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்துவதனை உறுதி செய்யும் நோக்கில் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply