• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில் களமிறங்கும் ஈழத் தமிழன்

தமது வாழ்க்கையினை சுதந்திரமாக அனுபவிக்க தமக்கென்று ஒரு தனி நாடு கோரி போராடி மௌனித்து இருக்கும் ஈழத்தமிழர்கள் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளின் அரசியலில் தம்மை நிலைநிறுத்தி உள்ளனர்.

அந்தவகையில் எதிர்வரும் (22.10.2023) ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு குரல் கொடுக்கும் பிரதான கட்சியான பசுமை கட்சி விளங்குகின்றது.

சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வரும் யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் ரிசோத் செல்வதயாளன் அவர்களை வெற்றி பெறவைப்பதற்கான முளற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் ஈழத்தமிழர் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை திட்டமிடப்பட்ட இன அழிப்புத்தான் என்பதை ஈழத்தமிழர் சார்பாக சுவிட்சர்லாந்து நாடுாளுமன்றத்தில் தமிழர் குரல் தொடர்ந்து ஒலிப்பதையும் உறுதிப்படுத்த முடியும் என ஆர்காவ் மானில ஈழத்தமிழர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதே போன்று இம்முறை சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற தேர்தலிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரதான கட்சிகள் சார்பாக ஈழத்தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply