• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அழைத்து செல்ல வரவழைக்கப்பட்ட விமானம்

கனடா

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் கனடா பிரதமரை அழைத்து செல்ல மாற்று விமானம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானம் இன்று இரவு 10 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a Reply