• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசியப் பாதுகாப்பையே நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுத்தது - சரத் வீரசேகர

இலங்கை

தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக நாட்டின் தேசியப் பாதுகாப்பையே நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்;களுக்கு அகருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முஸ்லிம் அடிப்படைவாதிகள் 9 பேர், சிங்கள – பௌத்தர் ஒருவரை நாட்டின் தலைவராக்க தாக்குதலை நடத்தினார்கள் எனக் கூறுவது நம்பக்கூடிய ஒன்றல்ல.

சனல் 4 நிறுவனத்திற்கு புலம்பெயர் அமைப்புக்களின் ஊடாகவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாகவும்தான் நிதி வருகிறது.

இந்தத் தரப்பினர்தான், இவ்வாறான காணொளிகளை தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள்.

அஸாத் மௌலான என்பவர் 70 மில்லியன் வரை கொள்ளையடித்து நாட்டை விட்டு தப்பியோடியவர்.

ஏன் இந்தத் தகவல்களை வெளியிட அவருக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டது?

நியுசிலாந்து பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சஹ்ரானே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கும்போது, இந்தத் தாக்குதலுக்கு தற்போதைய எதிர்க்கட்சியான அப்போதைய நல்லாட்சியினர் தான் பொறுப்பேற்ற வேண்டும்.

ஏனெனில், இந்தத் தாக்குதல் இடம்பெற முன்னர், 10 தாக்குதல் சம்பவங்கள் அறங்கேறியுள்ளன.

சஹ்ரானை கைது செய்யுமாறு தெரிவித்தும் கைது செய்யப்படவில்லை. இந்திய புலனாய்வுப் பிரிவு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தும் நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காது.

தங்களின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக நாட்டின் தேசியப் பாதுகாப்பையே நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுத்தது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply