• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு கிடையாது - சஜித் திட்டவட்டம் 

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சகலருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் எந்த மன்னிப்பும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தென்னிலங்கை பிக்குகள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (10.09.2023) நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அரசியல் ஆதாயம் மற்றும் சேறு பூசும் பிரசாரங்களிலிருந்து விடுபட்ட முற்போக்கான, மேம்பட்ட தீர்வே தேவை.

 உண்மையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அந்த உண்மையில் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும். 2019 ஜனாதிபதித் தேர்தலிலும், 2020 பொதுத் தேர்தலிலும் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த உண்மையை தற்போதைய அரசு வெளிப்படுத்தவில்லை.

மகா சங்கத்தினர் தலைமையிலான சமயத் தலைவர்கள் எவ்வளவோ குரல் எழுப்பியும் அரசு அவர்களின் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை. தற்போது அனைத்தும் பொய்யாகிவிட்டது.

பயங்கரவாதிகளைக் கைது செய்ய ஆணை கிடைத்த நாள் முதல் இன்று வரை தகவல்களை மறைப்பதும் ஏமாற்றுவதுமே இடம்பெற்று வந்துள்ளன.

நாம் சர்வதேச விசாரணையை விரும்பமில்லை என்றாலும், இது குழப்பமாகி விட்டதால் முறையான சர்வதேச விசாரணையின் மூலம் தான் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும் என நம்புகின்றோம் என தெரிவித்தார்.
 

Leave a Reply