• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர் சூழலில் தேர்தல் நடத்தும் ரஷ்யா

உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ரஷ்யா தேர்தலை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளான லூஹான்ஸ்க், கெர்சான், ஸபோரிஷியா மற்றும் டொனட்ஸ்கில் பிராந்திய தேர்தல் நேற்று தொடங்கியது.
  
ஆனால், குறிப்பிட்ட பிராந்தியங்களில் சர்ச்சைக்குரிய வகையில் தேர்தல் நடத்துவதற்கு ஐரோப்பிய கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உக்ரைன் பிராந்தியங்களில் ரஷ்யா நடத்தும் தேர்தல், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. அந்த சட்டங்களை ரஷ்யா தொடர்ந்து மீறி வருகிறது' என கூறியுள்ளது.

இதற்கிடையில், உக்ரைன் நாடாளுமன்றம் ரஷ்யா நடத்தும் இந்த தேர்தல் அந்நாட்டின் மக்கள் விரோத நடவடிக்கை என்றும், அந்தத் தேர்தலின் முடிவுகள் அங்கீகரிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் நடவடிக்கை தான் இந்த தேர்தல் என்று கூறப்படுகிறது. 

Leave a Reply