• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேவாக் டுவீட்டுக்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி

சினிமா

இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முடிவுக்கு பல தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரத் என மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்திருந்தார். அதில், ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது என கூறியிருந்தார். சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விஷ்ணு விஷால் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்தார். இந்த படம் தமிழக அளவில் வெற்றி கண்டது. ஏன் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு படமாக இருந்தது என்றே கூறலாம்.
 

Leave a Reply