• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல இசையமைப்பாளர் சாலை விபத்தில் மரணம்

சினிமா

கேரள அரசின் சிறந்த பின்னணி இசை அமைப்பாளருக்கான விருது பெற்ற இசையமைப்பாளர் வீ.தஷி சாலை விபத்தில் மரணமடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாளப் படங்களில் பணியாற்றிய போது குட்டி கிருஷ்ணன் என்ற தயாரிப்பில் அறிமுகமானார். அதன் பின் ஒரு படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது.
  
தந்த்ரா என்ற அந்த படத்தின் பின்னணி இசைக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது மலையாள திரை உலகில் அவருக்கு கிடைத்தது. திரை உலகத்திற்காக தனது பெயரை வீ.தஷி என்று மாற்றிக் கொண்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஒரியா, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள தஷி, இதுவரையில் சுமார் 90 புது பாடகர்களையும், 160 பாடலாசிரியர்களையும் இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

நேற்று மதியம் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த தஷி கோவை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 49 வயதான அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

தமிழ், மலையாளம் என திரையுலகில் மிகவும் புகழ் பெற்றவரான இசையமைப்பாளர் தஷியின் இந்த அகால மரணம் அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

Leave a Reply