• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு - ஐ.நா அறிவிப்பு

இலங்கை

இலங்கையின் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் எண்டர் பிரேன்ச் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த உலகில் சுமார் 20 நாடுகளில் விரைவாக மீண்டு, இயல்பு நிலைக்கு வந்த இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாக ராஜபக்ஷ் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் எண்டர் பிரேன்ச் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், ஊழல் எதிர்ப்பு சட்டம், மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, இனங்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நல்லிணக்க செயல்முறை தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்துகொண்டு தயாரிக்கப்பட்டது என்றும் குறித்த சட்டமூலம் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய தடையாக இருந்து வரும் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்காக ஊழல் எதிர்ப்பு சட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை பெற்றுக்கொண்டதாகவும அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அனுமதிக்கப்பட்ட சட்டம் என சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக கடந்த 10 மாதங்களுக்குள் 30க்கும் மேற்பட்ட புதிய சட்ட மறுசீரமைப்புகளை அனுமதித்துக்கொண்டதாகவும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

யுத்தத்துக்கு பின்னர் இனங்களுக்கிடையில் ஒத்துழைப்புகளை முன்னேற்றுவதற்காக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை முறைகள் தொடர்பாக வதிவிட ஒருங்கிணைப்பாளர் இதன்போது கேட்டறிந்துள்ளார்.

Leave a Reply