• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் அதிகரிக்கும் போலி வேலை வாய்ப்பு மோசடிகள்

கனடா

கனடாவில் போலி வேலை வாய்ப்பு மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடியா மோசடி தவிர்ப்பு நிலையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி மோசடி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இவ்வாறு போலி வேலை வாய்ப்புகள் வழங்கும் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இணைய வழியில் சுயாதீன பணிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவ்வாறு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி இவ்வாறு மோசடி மேற்கொள்ளப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சியின் கொடுப்பு உணவு வழங்குவதாக தெரிவித்து இந்த மோசடிகள் இடம் பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நட்புறவாக பழகி அதன் மூலமாக பண மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 32000 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

Leave a Reply