• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை - பிரித்தானியா திட்டம் 

பிரித்தானியாவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் மையங்கள் விரைவில் நிரம்பி வழியலாம் என்பதால், புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை அணிவிக்க பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது. பிரித்தானியா, சட்டவிரோத புமபெயர்ந்தோரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது.
  
மிதவைப்படகுகளில் புலம்பெயர்ந்தோரை அடைக்கலாம் என்றால், அங்கு சுகாதாரப் பிரச்சினை. ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டால், அந்த திட்டம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் கூறிவிட்டது.

ஆனாலும், விடாமல் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்துகொண்டே வருகிறது உள்துறை அலுவலகம்.

தடுப்புக்காவல் மையங்கள் நிரம்பும் பட்சத்தில், புகலிடக்கோரிக்கையாளர்களைக் கண்காணிக்க என்னென்ன வழிகள் உள்ளனவோ அத்தனையையும் முயன்றுபார்த்துவிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார் உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன்.

பிரித்தானியாவிலிருந்து ஒரு கூட்டத்தினரை வெளியேற்ற வேண்டியுள்ள நிலையில், அவர்களைக் கட்டாயம் கண்காணித்துத்தான் ஆகவேண்டும் என்று கூறியுள்ளார் சுவெல்லா.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை தடுப்புக்காவலில் வைக்க புதிய சட்டங்கள் வழிவகை செய்கின்றன. ஆனால், தடுப்புக்காவல் மையங்களில் 2,500 பேருக்குத்தான் இடம் உள்ளது.

ஆகவே, தடுப்புக்காவல் மையங்களில் இடமில்லாததால் வெளியே நடமாட விடப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தலைமறைவாகிவிடாமல் தடுப்பதற்காக, அவர்களுக்கு, காலில் மின்னணுப்பட்டை அணிவிப்பது முதல் பல்வேறு திட்டங்களை அதிகாரிகள் பரிசீலித்துவருவதாக தி டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

Leave a Reply