• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேயிலையையும் விட்டு வைக்காத கடும் வறட்சி

இலங்கை

மலையகம் முழுவதும் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக கண்டி பிரதேசத்தில் பத்தாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான சிறு தேயிலை தோட்டங்கள் சேதமடைந்துள்ளன.

சுமார் 30,000 சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் 10,000 ஹெக்டேயருக்கு மேல் தேயிலையை பயிரிட்டுள்ளதாக கண்டி சிறு தேயிலை தோட்ட சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த தோட்ட உரிமையாளர்களின் பிரதான வருமானம் தேயிலை பயிர்ச்செய்கையாகும், தற்போது கடும் வறட்சி காரணமாக அந்த வருமானம் இல்லாமல் போயுள்ளது.

வறட்சியின் தாக்கம், மரங்களுக்கு உரமிட இயலாமை, தேவையான தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் அறுவடையின் தரம் குறைந்து தேயிலைக்கு கிடைக்கும் விலையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டங்களை பாதித்துள்ள இந்த வறட்சியான காலநிலையின் தாக்கத்தை தணிக்க அதிகார சபை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply