• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமான விபத்தில் உயிரிழந்த வாக்னர் தலைவர் பிரிகோஜின் - உறுதிப்படுத்திய ரஷியா

சினிமா

ஷியாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு விசாரணைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து ரஷியாவின் விசாரணைக் குழு செய்தித் தொடர்பாளர் வெட்லனா பெட்ரென்கோ அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த புதன் கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் மீட்கப்பட்ட பத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை அனைத்தும் விமானத்தில் பயணம் செய்த பத்து பேருடையது தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ரஷியாவின் வான் போக்குவரத்து ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட தகவல்களில் பிரிகோஜினின் தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விபத்தில் சித்திய விமானத்தில் பிரிகோஜின் தவிர விமானி மற்றும் ஏழு பயணிகள் பயணம் செய்தனர். அந்த வகையில், விமானம் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply