• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்

சினிமா

ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்றும் வெள்ளைகாரன் பெயரிட்டான், 12 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்...
சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத திரும்புவதற்கு. ரயில்வே டைம் முறைதான் அவர்களுக்கு டூட்டி மாற்றப்படும்...
ரயில் மறியல் / ரயில்வே கேட்டில் விபத்து, அல்லது தண்டவாளத்தில் கோளாறு எனில், வண்டி ஓடாமல் சும்மா ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. போகவேண்டிய இடத்திற்க்கு போகும் வரை இஞ்சின் ஆப் செய்யக்கூடாது என்பது ரயில்வே விதிமுறை.... 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது...
ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்... (இது டீசல் இன்ஜின் வண்டிளுக்கு மட்டுமே)
*அதெல்லாம் சரி...
இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா???
தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும்.
VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுகி அடுத்த ஸ்டேஷனுக்கு சிக்னல் கொடுக்கவேண்டும்...

அப்படி அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்கு. பிறகு சிகப்பு விளக்கு எரியும், அதையும் அவர்கள் உதாசீனம் படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு அலாரம் சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கு எரியும், அதையும் உதாசீனம் படுத்தினால், வண்டி தானாகவே நின்று விடும், இந்த (Automatic braking system) வெள்ளைக்காரன் கண்டுபிடிக்கவில்லை...
ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தை கூட்டுவது, குறைப்பது, ஹாரன் அடிப்பது போன்ற வேளைகளில் இருந்தால், அந்த பொத்தானை அமுக்க வேண்டிய அவசியமில்லை...
தற்போதுதான், டிஜிட்டல் போர்ட் பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை, வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு பெரிய கம்பியை கொதிக்கும் இஞ்சினுக்கு நடுவே பிடித்து இழுத்து இழுத்து விட வேண்டும். அதற்கு அவன் வைத்த பெயர் “Deadman’s Lever”.
இன்று வரையில் ரயில்வே ஓட்டுனர்களுக்கு என்று தனியாக கழிப்பறைகள் ஏதும் இல்லை...
அடுத்த ஸ்டேஷன் வரும்வரை அவர்கள் அடக்கி வைத்திருக்கதான் வேண்டும்...
 ஒரு நிமிடம்தான் ஸ்டேசனில் நிற்கும் அடுத்து சிக்னல் விழுந்தவுடன் வண்டி எடுக்கனும். எக்ஸ்பிரஸ் ரயில் என்றால் 120 kmph குறையாமல் வண்டி ஓட்டனும். அடுத்த Station வரப்போகிறது என்றால் 10KM தூரத்திலே Mother Bord Manitare Signal... Stationக்கு அலாரம் குடுக்க வேண்டும், அந்த காலத்தில் (சிமிழ் விளக்கு) காட்டுவார்கள்.... சிகப்பு கொடி / பச்சை கொடி இன்றுவரை நடைமுறையில்தான் உள்ளது... கேட் horn அடிக்கனும்! அதுவும் விட்டு விட்டுதான் அடிக்கணும் காது சவ் கிழியும் அளவிற்கு... 60 செக்கண்டுக்கு vcd பிரஸ் பன்னனும்! அசிஸ்டெண்ட் தூங்கிட்டானா அவரை எழுப்பனும்! இதெல்லாம் ரயில் ஓட்டுநர்களின் விதிமுறைகள்...
இரவில் இஞ்சின் அதிகம் சூடு ஆகாது அனுபவமுள்ள பழைய ஓட்டுநர்கள் என்றால் 150/250கிமி வரை மின்னல் வேகத்தில் பறந்துவிடுவார்கள்... டிரையின் டைமிங் மெயிண்டன் செய்து கொள்வார்கள்... ! சிவப்பு சிக்னல் எங்க தெரிகிறது என பார்த்துக்கொண்டே இஞ்சினை இயக்குவர்கள்...
காடு / மலை பாதைகளில் போகும்போது திருடர்கள் Emergency செயின் இழுத்து வண்டியை நிறுத்த முயற்சிப்பார்கள்... அப்படி நிக்கும்போது யார் உதவியும் இரவு நேரத்தில் யாருக்கும் கிடைக்காது சிங்கம் சிறுத்தை புலி யானை என மிருகங்கள் வெளிச்சதை நோக்கி வரும்... 
சரக்கு வண்டியும் 16 டூ 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்பவர்கள் உண்டு! இதில் சாப்பாடு பிரச்சனை இருக்கு! கடைகளை தேடி ஓடனும்! சாப்பிடும் நேரத்தில் வண்டி ஓட்டா வேண்டிய சூழ்நிலையும் இருக்கும்...
கண்ட்ரோலர்களோ யாருமே சாப்பிட்டார்களா சாப்பாடு வாங்கி விட்டீர்களா என கேட்பதும் இல்லை அதற்கான நேரமும் ஒதுக்குவதில்லை!
இப்படியாக தொடர்கிறது...தொடர் வண்டியின் பயணம்...
வெள்ளைக்காரன் காலத்தில் துப்பாக்கி / வெடி குண்டு ஒயின் / விஸ்கி பேரால்கள் இறக்குமதி செய்யவும்... நம் நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதற்காகவும், புலி தோள் / யானை தந்தம்... தங்கம் / வெள்ளி / வைரம் / பவள முத்துக்களை / கடத்துவதற்காகத்தான்... இந்தியாவின் முக்கிய நகரங்களில் தண்டவளங்களை அமைத்து தொடர் வண்டியை அவன் அறிமுகப்படுத்தினான்...
இந்தியர்களின் பெரிய போராட்டத்திற்கு பிறகே "பிரிட்டிஷ் + இண்டியன் ரயில்வே" இந்திய மக்களுக்கான பொதுத்துறையாக... "இந்திய ரயில்வே துறையாக" மாறியிருக்கிறது...
இருப்பினும் ரயில் பயணம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஒரு குஷிதான்...
தாயின் தாலாட்டு போல...
தண்டவாளத்தில் கேக்குமே ...தட தட தட கட கடா... வென ஓசை...
ஆத்தோர, குளத்து ஓரத்தில் சிறுவர்கள் மீன் பிடிக்க, கன்னிப்பெண்கள் குளிக்க துணி துவைக்க... பையன், பொண்ணு பார்த்து சைட்டு அடிப்பது போல தண்டவாளத்தில் விசிலடித்துக் கொண்டே போகுமே...
அந்த ஹாரன் சத்தத்தை கேட்டாலே இப்போதும் உடம்பெல்லாம் சிழிற்குமே...
இந்திய சினிமாவில்... ரயிலை மையப்படுத்தி ஏகப்பட்ட திரைப்படங்களும், பாடல்களும் வந்திருகின்றன... காரணம்...
ரயில் பயணம் இந்தியர்களின் ஆக சிறந்த குறிப்பாக நடுத்தர மக்களின் சொகுசு வாகனமாக இருப்பதனால்...
#ஏழைகளின் #ராக்கெட்தான் #ரயில்

 

முஹம்மது முகமத்

Leave a Reply