• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குனர் காரை சிவனேசன் அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்

இலங்கை

அன்புடன் வசீகரன் 
இராவணனின் "புட்பக விமானம்" ஐ பெயரில் தாங்கி யாழ்ப்பாணத்தில் இருந்து கம்பீரமாக புறப்பட இருக்கிறது...
"புஷ்பக27"
(முழுநீளப்படம்)
"புஷ்பக" இராவணனுடன் தொடர்புபடுகிறது என்றால், அதன் விகுதியாக வரும் "27" யாருடன் தொடர்புபடுகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
படத்தின்Tagline:
"தமிழர்களின் தொன்மத்தைத் தேடிச் செல்லும் முதல் விண்வெளிப் பயணம்"
தமிழர்களின் தொன்மங்கள் சூறையாடப்பட்டும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் தமிழர்களின் தொன்மங்களைத் தேடிச் செல்லும் இந்த விண்வெளிப் பயணம் பூடகமாக எதையோ சொல்லும் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.
பாறைகளைத் தவிர வேறெதுவும் இல்லாத சந்திரனில் "சந்திராயன் 3" இறங்கியதையிட்டு இந்தியா பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழர்களின் தொன்மங்களைத் தேடி சந்திரனையும் தாண்டிச் செல்லப் போகும் இந்த "புஷ்பக27" இன் பயணம் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது என்கிறார் அதன் இயக்குனர் காரை சிவனேசன்.
ஆம்...
இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இனம் தன் வரலாற்றயும், தொன்மங்களையும் யதார்ர்தமான கதைகள் ஊடாகச் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத புறச்சூழலில்...
உண்மைகளைச் சொல்லாமல் கடந்து செல்வது, மறைப்பது அல்லது ஒடுக்குமுறையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் உண்மைகளைத் திரிப்பதல்ல சரியான வழி!
மாறாக,

உண்மைகளைச் சொல்வதற்கான மாற்று வழிகளையும் உத்திகளையும் தேட வேண்டும். 
"புஷ்பக27" வகை, "Fantasy/Science Fiction" படங்கள் அத்தகைய  சிறந்த உத்திகளாகும்.
 டைட்டிலுக்குள்ளேயே பூடகமாக அரசியல் பேசும் இந்த...
"புஷ்பக27" வெற்றியுடன் இறன்ங்க எனது வாழ்த்துகள்.

Vaseeharan Sivalingam
 

Leave a Reply