• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய விருது முழுப்பட்டியல்

சினிமா

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

தேசிய விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் முழு விவரம் வருமாறு:- சிறந்த திரைப்படம் : ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் (இந்தி) சிறந்த தமிழ் திரைப்படம்: கடைசி விவசாயி சிறந்த பிரபலமான திரைப்படம்: ஆர்ஆர்ஆர் சிறந்த இந்தி திரைப்படம்: சர்தார் உத்தம்

சிறந்த தெலுங்கு படம்: உப்பெனா சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படம் : தி காஷ்மீர் ஃபைல்ஸ் சிறந்த குஜராத்தி திரைப்படம்: செல்லோ ஷோ சிறந்த கன்னட திரைப்படம்: 777 சார்லி சிறந்த மராத்தி திரைப்படம்: ஏக் தா காய்சாலா சிறந்த மலையாள திரைப்படம்: ஹோம் சிறந்த இயக்குனர்: நிகில் மஹாஜன் (தி ஹோலி வாட்டர்) சிறந்த நடிகர்: அல்லு அர்ஜூன் (புஷ்பா) சிறந்த நடிகை: ஆலியா பட் (கங்குபாய் காத்தியவாடி), கீர்த்தி சனோன் (மிமி) சிறந்த உறுதுணை நடிகர் (ஆண்): பங்கஜ் திரிபாதி (மிமி) சிறந்த துணை நடிகை: பல்லவி ஜோஷி (தி காஷ்மீர் ஃபைல்ஸ்) சிறந்த குழந்தை நட்சத்திரம்: பாவின் ரபாரி (செல்லோ ஷோ)

சிறந்த பின்னணி பாடகர் : காலபைரவா (ஆர்ஆர்ஆர்) சிறந்த பின்னணி பாடகி: ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்) சிறந்த ஒளிப்பதிவாளர்: அவிக் முகோபாத்யாயா (சர்தார் உதம்) சிறந்த தழுவல் திரைக்கதை எழுத்தாளர்: சன்ஜய் லீலா பன்சாலி, உட்டர்காஷினி (கங்குபாய் காத்தியவாடி) சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: ஷாயி கபீர் (நயாட்டு) சிறந்த படத்தொகுப்பு: சன்ஜய் லீலா பன்சாலி (கங்குபாய் காத்தியாவாடி) சிறந்த பின்னணி இசை: எம்.எம்.கீரவாணி (ஆர்ஆர்ஆர்) சிறந்த இசையமைப்பாளர்: தேவிஸ்ரீ பிரசாத் (புஷ்பா) சிறந்த ஒப்பனை கலைஞர்: பிரித்தீ சிங் (கங்குபாய் காத்தியாவாடி) சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்: ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்ஆர்ஆர்) சிறந்த நடன இயக்குனர்: ப்ரேம் ரக்ஷித் (ஆர்ஆர்ஆர்) சிறந்த சண்டைக் கலைஞர்: கிங் சாலமன் (ஆர்ஆர்ஆர்)
 

Leave a Reply