• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசிளங்குமரி.....

சினிமா

1961இல் வந்த படம். எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோசனா, நம்பியார், தங்கவேலு, டி.ஏ. மதுரம், அசோகன், முத்துராமன் நடிப்பு.  ஜி. ராமநாதன் இசை. கலைஞர் கதை வசனம். பழம் பெரும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. வெற்றிப் படம்..
எம்ஜிஆரும் ராஜசுலோசனாவும் பார்க்க அழகாக இருந்தார்கள்.
“சின்னப் பயலே சின்னப் பயலே” மாஸ்டர்பீஸ். பட்டுக்கோட்டையின் ஸ்பெஷாலிடியே எளிமையான வார்த்தைகளில் அருமையான கருத்துகளை எழுதுவதுதான். டிஎம்எஸ் பிய்த்து உதறிவிட்டார்.
“தாரா அவர் வருவாரா” கு.மா. பாலசுப்ரமணியம் எழுதி எஸ். ஜானகி பாடியது. நல்ல பாட்டு. இதுதான் ராமநாதனின் முத்திரை உள்ள ஒரே பாடல். க்ளாசிக்கல் சங்கீதத்தின் தாக்கம் தெரிகிறது.

“ஏற்றமுன்னா ஏற்றம்” பட்டுக்கோட்டை எழுதி சீர்காழியும் டிஎம்எஸ்ஸும் பாடியது.
இதை தவிர
“தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்” கண்ணதாசன் எழுதி சுசீலா பாடியது.
“அத்தானே ஆசை அத்தானே”பாடல் பிரபலமான இயக்குனர்
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதி
 பி. லீலா பாடியது. 
தளபதி நம்பியார் தான் ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி எம்ஜிஆரின் தங்கை பத்மினியை மணந்துகொள்கிறார். உழவர் மகனான எம்ஜிஆர் தன் பரம்பரை வாளை கொண்டுபோய்விட்ட நம்பியாரின் அப்பாவிடம் இருந்து அந்த வாளை மீட்டு வர செல்கிறார்.
வழியில் ஆபத்தில் இருக்கும் இளவரசி ராஜசுலோசனாவையும் பிரமுகர் அசோகனையும் காப்பாற்றுகிறார்.
ராஜ சுலோசணவும்   எம்ஜிஆரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் 
 நம்பியார் ராஜாவாக ஆசைப்பட்டு பத்மினியை கழற்றிவிட்டுவிட்டு சுலோசனா  பின்னால்  போக ஆரம்பிக்கிறார். எம்ஜிஆர் ஒரு மல்லனை தோற்கடித்து தன் வீரத்தை நிரூபித்து நம்பியாரின் அப்பாவிடம் இருந்து தன் பரம்பரை வாளை மீட்கிறார்.
ஆனால் கிராமத்துக்கு போனால் பத்மினியும் நம்பியாரும் இல்லை. அவர்களை தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து நம்பியாரை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
நடுவில் தன் தங்கை மகனை தூக்கிக்கொண்டு “சின்னப் பயலே சின்னப் பயலே” என்று புத்தி எல்லாம் சொல்கிறார். கணவன் சொல்லை தட்டாத பத்மினி நம்பியாரின் அப்பாவிடமே சேர்கிறார்.
எம்ஜிஆரும் நம்பியாரின் அப்பாவிடமே வாட்பயிற்சி பெறுகிறார். கடைசியில் நம்பியாரிடம் பெரிய சண்டை போட்டு, நம்பியார் திருந்தி, சுபம்!
எம்ஜிஆரும் நம்பியாரும் போடும் க்ளைமாக்ஸ் சண்டை பிரமாதம். எம்ஜிஆர் இரும்பு கையுறைகளோடு போடும் மல்யுத்தமும் அபாரம்.
எம்ஜிஆரும் தங்கவேலுவும் ஒருவரை ஒருவர் “தேங்காய்ப்பூ தலையா” என்று கூப்பிட்டுக்கொல்கிறார்கள்.
அசோகன்  இதில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை. 
பாட்டுக்களுக்காகவும், சண்டைகளுக்காகவும் பார்க்கலாம்.

ஸ்ரீநிவாஸ்.....

Leave a Reply