• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் வறட்சியால் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கை

மன்னாரில் அண்மைக்காலமாக நிலவிவரும்  கடுமையான  வறட்சி காரணமாக 3,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமையினால் பொதுமக்கள் மாத்திரமல்லாது  ஆயிரக்கணக்கான  கால் நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வழங்கிய தகவலின் படி ”மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள மல்லவராஜன்  கட்டையடம்பன்,மாதா கிராமம்,பெரிய முறிப்பு,இரணை இலுப்பகுளம்,கீரிசுட்டான் போன்ற பகுதிகள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன.

குறிப்பாக 952 குடும்பங்களை சேர்ந்த 3,244 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இவ் வறட்சியான காலநிலை தொடரும் பட்சத்தில் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கலாம் எனவும்  எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply