• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

இலங்கை

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரமிட் திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குறிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய 9 நிறுவனங்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Tiens Lanka Health Care (Pvt) Ltd.
    Best Life International (Pvt) Ltd.
    Global Lifestyle Lanka (Pvt) Ltd.
    Mark-Wo International (Pvt) Ltd.
    V M L International (Pvt) Ltd.
    Fast 3Cycle International (Pvt) Ltd (F3C)
    Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka
    OnmaxDT
    MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka (Pvt) Ltd and MTFE DSCC Group (Pvt)Ltd. ஆகிய நிறுவனங்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட திட்டங்களை நடத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, பொதுமக்களுக்கு பகிரங்க அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி, இவ்வாறான பிரமிட் திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்குவது, வழங்குவது, ஊக்குவிப்பது, விளம்பரம் செய்வது, பராமரிப்பது, நிதியளிப்பது அல்லது நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்களுடன் சில உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளதாக சில நபர்கள் முன்வைக்கும் கூற்றுக்களை இலங்கை மத்திய வங்கி நிராகரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரமிட் திட்டங்களுக்கான குற்றவியல் நடவடிக்கைகளை பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a Reply