• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையகக் கதைகளின் காட்சி என்னும் கண்காட்சி ஆரம்பம்

இலங்கை

நுண்கலைத்துறை மற்றும் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ‘சொர்க்கத்தின் சுமை – மலையகக் கதைகளின் காட்சி’ எனும் தலைப்பில் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை காட்சிக்கூடத்தில் நேற்று புதன்கிழமை (23) மாலை ஆரம்பித்த கண்காட்சியை ஓகஸ்ட் 31 ம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், நுண்கலைத்துறை தலைவர் பேராசிரியர் தா.சனாதனன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றதுடன் விரிவுரையாளர்கள் மாணவர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பிரபல கர்நாடக இசைப் பாடகர் ரி.எம். கிருஷ்ணா, பிரபல தழிழக எழுத்தாளர் பெருமாள் முருகன், வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி மற்றும் காலச்சுவடு வெளியீட்டக உரிமையாளர் கண்ணன் சுந்தரம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தென்னிந்தியாவில் இருந்து மலையகத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு இருநூறு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு குறித்த கண்காட்சி ஏற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply