• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் ஏலத்திற்கு வந்த நீல நிற இரத்தினக்கல் - 43 கோடிக்கு விற்பனை 

இலங்கை

இலங்கையில் நீல இரத்தினக்கல் ஒன்று சுமார் 43 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் கஹாவத்த தட்டங்கே பிரதேசத்தில் உள்ள மாணிக்க கல் சுரங்கத்தில்  நீல நிற இரத்தினக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நீல நிறக்கல் புளு ஸ்பாயர் ரக இரத்தினக் கல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த இரத்தினக்கல் 99 கேரட் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் இந்த புளு ஸ்பாயர் ரக இரத்தினக் கல் சுமார் 43 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக நபர் ஒருவர் இந்த இரத்தினக்கல்லை சுமார் 43 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். 

Leave a Reply