• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரைத்துறைக்கு ஈடில்லா இழப்பை ஏற்படுத்தி மறைந்த சித்திக் - சரத்குமார் வேதனை

சினிமா

பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சரத்குமார், இயக்குனர் சித்திக்கிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிரபல மலையாள இயக்குனரும், தமிழில் சிறந்த படங்களை இயக்கியவரும், சிறந்த திரைப்பட எழுத்தாளருமான சித்திக் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. திரைத்துறைக்கு ஈடில்லா இழப்பை ஏற்படுத்தி மறைந்த சித்திக் பிரிவால் வேதனையில் வாடும், அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
 

Leave a Reply