• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெல்லிசை மன்னர் நினைவுகள் 40 

சினிமா

THE WORLD IS  MADE FOR ME.FLOWING RIVERS ARE THERE FOR ME. என்றொரு பாடல் மனிதனாக இரு  ஆல்பத்திற்காக S.P.B. அவர்கள் பாட பதிவானது.அனந்தா அவர்களிள் சகோதரி எழுதிய பாடல்  என்று கேள்விப் பட்டேன். கூர்ந்து கவனித்த போது தான் ஒரு உண்மை விளங்கியது.உலகம் பிறந்தது எனக்காக பாடலை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதற்கு மன்னர் வித்தியாசமாக மெட்டமைத்து இருந்தார். S.P.B.யின் ஆங்கில பாடலை கேட்கும் போதே நினைவுகள் பின்னோக்கி செல்ல துவங்கின. இதே S.P.B. இதே மன்னரின் இசையில் பாடிய வித்தியாசமான இன்னொரு பாடல்.

AVM C தியேட்டர் களை கட்டியிருந்தது. காரணம் 29 ஆண்டுகளுக்கு பிறகு மெல்லிசை மன்னர்கள் மீண்டும் இணைந்து இசையமைக்கும் எங்கிருந்தோ வந்தான் படத்தின் பூஜை மற்றும் பாடல் பதிவு. மெல்லிசை மன்னர்கள் இருவரும் காலை 7.30 மணிக்கு வந்து விட்டனர். மன்னருடன் அம்மாவும் உடன் வந்திருந்தார். இயக்குநர் சந்தான பாரதி அவர்களை வரவேற்று மாலைகள் அணிவித்தார்.பல வி.ஐ.பிக் கள் வந்திருந்தனர். தயாரிப்பாளர் V.SUNDARAN அவர்கள் மன்னர்களிடம் ஆசி பெற, பூஜை தொடங்கியது.பூஜை முடிந்ததும் தயாரிப்பாளர் மன்னரிடம் பேசும் போது சார் ஒரு அதிசயத்தை பார்த்தீங்களா  நம்ம கம்பெனி பெயர் V.S.R. பிக்சர்ஸ். V FOR VISWANATHAN R FOR RAMAMURTHY இரண்டு பேரையும் இணைத்த S FOR SUNDARAN  என்றார். அன்று அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் மனதில் பசுமையாக உள்ளது.பூஜை முடிந்ததும் சிற்றுண்டி. மன்னர் வீட்டிலிருந்து வந்த சிற்றுண்டி மன்னர்களுக்கும் கவிஞர் வாலிக்கும்  அம்மாவிற்கும் எனக்கும் பரிமாறப் பட்டது. சிற்றுண்டி முடிந்ததும் சந்தான பாரதி மெல்லிசை மன்னர்கள் கவிஞர் வாலி அமர கம்போசிங் தொடங்கியது.இயக்குநர் காட்சியை விளக்க மன்னர் சந்தம் சொல்ல கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுத தொடங்கினார். ம
ெல்லிசை மன்னர்கள் இருவரையும் இணைந்து அன்று தான் முதன் முதலில் பார்த்தேன். மன்னர் சில இடங்களில் சில மாற்றங்களை செய்தார். ராமமூர்த்தி அவர்கள் இயக்குநருடன் பேசிக் கொண்டிருக்க  மன்னர் ஒலிப்பதிவிற்கான ஏற்பாடுகளை செய்ய, சற்று நேரத்தில் பாடல் ஒலிப்பதிவு தொடங்கியது.

எங்கிருந்தோ வந்தான் யாதவ குலத்து மாதவன் மதுசூதன் எங்கிருந்தோ வந்தான் என்ற பாடல் பதிவானது. முதலில் ட்ராக் தான் எடுக்கப்பட்டது. மறு நாள் இரவு S.P.B. அவர்கள் வந்து பாடலை பாடினார். SPB அவர்கள் மிகவும் ரசித்து அனுபவித்து அந்த பாடலை பாடினார். ஒரு பாடலின் PRELUDE எனப்படும் முகப்பிசை INTERLUDE  எனப்படும் இடையிசை ஆகியவற்றை மன்னர் அமைக்கும் பாணியே தனி ரகம். தனக்கு தேவையான இசையை ORAL ஆக சொல்லியோ ஆர்மோனியத்தில் வாசித்தோ  அந்தந்த இசைக் கலைஞர்களிடம் வாங்குவது என்பது மிகவும் கடினமான காரியம். அதை மன்னர் செய்யும் போது  அவரது கடின உழைப்பு தெரியும். இது இப்படி என்றால் மன்னர் ரீ ரிகார்டிங் எனப்படும் பின்னணி இசைக் கோர்ப்பு செய்வது தனி ரகம்.

Ganesh Ramaswamy

Leave a Reply