• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசனின் திரைக்கதை ?

சினிமா

எப்படி முடிப்பது என்று ஒரு திரைப்படத்தை முடிக்க தெரியாமல் டைரக்டர்பாலசந்தர்தவித்த போது, தனது பாடல் மூலம் அந்த திரைப்படத்தை முடித்து வைத்து, ஒரு பாடலை Climax ஆக்கி, அந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றியவர் ஒரே ஒருவர் தான்! கவியரசர் கண்ணதாசன்
அந்த படம் பெயர் அபூர்வ ராகங்கள். அதன் டைரக்டர் கே பாலச்சந்தர்.
ஒரு தந்தையும் மகனும் வளர்ந்த ஒரு பெண்ணையும், அவள் சிறு வயது மகளையும் மாற்றி கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இது பாலச்சந்தர் சொன்னது.
ஆனால் உண்மையில் அது ராமதாஸ் என்று ஒரு நபர், தன்னுடைய கதை திருடப்பட்டது என்று கோர்ட் படி ஏறி, நிரூபணம் செய்து அந்த கேசில் வெற்றி பெற்று நஷ்ட ஈடு வாங்கினார்!
யார் எழுதிய கதையோ, ஆனால் அந்த கதை ஒரு கண்றாவி என்று கவிஞர் அவ்வளவு லேசில் ஆர்வமாக பாட்டு எழுதவில்லை!! 
டைரக்டர் பாலசந்தருக்கு கோபம்.
ஆனால் திடீரென்று ஒரு நாள், கவியரசர் எக்கச்சக்க பாடல்கள் எழுதிவிட்டார். எதை எடுப்பது என்று தெரியாத அளவுக்கு பாடல்கள்.
அதில் ஒன்றுதான், 
" கே ஜே யேசுதாஸ் பாடும் 
அதிசய ராகம் ஆனந்த ராகம் என்ற பாடல்!
 இதற்குப் பிறகு அந்த படத்தின் டைட்டில் சாங்,
" ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் " என்ற பாடல்
அந்தப் படத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் கமலஹாசன் இன்று இரு பெரிய நடிகர்களை கொண்டு வந்ததே அவர்தான்!!
சரி எப்படி முடிப்பது என்று தெரியாமல் இருக்கும்போது, கடைசி காட்சியில் ஒரு பாடல் வைக்கிறார் டைரக்டர். இப்போது படத்தை முடிக்கும் பொறுப்பு கண்ணதாசன் கையில் உள்ளது.
கண்ணதாசனுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கடவுள் மீது அளவு கடந்த பக்தி.
கடைசி காட்சியில் கணவன் ரஜினிகாந்த் வந்து விடுகிறான்.
தலைவன் திருச்சானூர் வந்து விட்டான்,
தாயார் தர்ம தரிசனத்தை தேடுகிறாள்.

ஸ்ரீவித்யா கீழே இருப்பார். ரஜினிகாந்த் படிகள் மேலே இருப்பார்.
திருப்பதியை வைத்து இந்த இடத்தில் யாராவது பாட்டு எழுத முடியுமா? முடியும் என்று நிரூபித்து இருப்பார் கண்ணதாசன்.
அதாவது கணவனும் மனைவியும் சேர வேண்டும் என்று முடிப்பார்.
அடுத்தது தந்தை மீது கோபம் கொண்ட கமலஹாசனை சமாதானப்படுத்த,
தந்தை 
பழனிமலை வந்துவிட்டான்
வா முருகா , என்று முருகனைப் பற்றி பாடியிருப்பார்.
நாராயணன் சிவன் முருகன் மூவரை வைத்து, ஒரு சிக்கலான குடும்பக் கதைக்கு தீர்வு சொல்வது, எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
அப்போது பாலச்சந்தருக்கு அதுதான் ஆரம்பம். பாலச்சந்தர் மட்டுமல்ல, அவர் உருவாக்கிய கமலஹாசன் ரஜினிகாந்த் எல்லோருக்கும் ஆரம்பம் பிரமாதமாக அமைந்து போவதற்கு கண்ணதாசன் தான் காரணம்.
இதுதான்கவிஞரின் கவிதிறமை என்று.

Selvamani

Leave a Reply