• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான்தான் சகலகலா வல்லவன் 

சினிமா

கமல்ஹாசன் சகலகலாவல்லவன் " என்பதை நிரூபிக்கும் வகையில் ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் ஓர் திரைப்படத்தை உருவாக்கியது, அதையே தலைப்பாக வைத்து.எழுத்தாளர் பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதினார் ..

இப்படத்தை எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன், எம்.எஸ்.குகன் ஆகியோர் தயாரிக்க ஒளிப்பதிவை பாபுவும், படத்தொகுப்பை ஆர். விட்டல் என முடிவாகி மார்ச் 1982 ல் ரஜினிகாந்த் ஆரம்ப விழாவில் கலந்து கொள்ள படம் தொடங்கப்பட்டது , படம் அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வெளியானது .

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மசாலா படத்திற்கு தேவையான அனைத்தும் கலந்த ஒரு பொழுதுபோக்கு படத்தை அந்த ஆண்டில் கண்ட ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடினார்கள் .

இந்த மாதிரியான கவர்ச்சி , செண்டிமெண்ட் ,ஆடல் , பாடல் , வீரம் , பாசம் , சண்டை , பாடல்கள் ,வசனம் என கலந்த கலவையை அப்போது அந்த ரசிகர்கள் அதுவரை கண்டதில்லை . அதனாலேயே படம் வெள்ளி விழா கண்டது .

பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது .நல்லதோ கெட்டதோ இந்த படத்தில் டிஸ்கோ பாட்டுக்கும் & முனகல் பாட்டுக்கும் முன்னுதாரமான இந்த படம் அமைந்து விட்டது . 

இளமை இதோ இதோ ' பாடலுக்கு பிறகு மினுக் மினுக் என்கிற வெளிச்ச லைட் இல்லாமல் எந்த படத்திலும் பாடல் அமையவில்லை. 

அந்த எண்பதுகளில் டிஸ்கோ லைட்டுடன் நாயகன் நாயகி ஆடுவது எப்படியாவது தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் புகுத்தி விட்டார்கள் .

எல்லா படத்திலும் டிஸ்கோ பாட்டு , சிலுக்கு டான்ஸ் , முக்கி முனகும் ஒரு பாட்டு என எல்லா படங்களிலும் தொடர்ந்து இந்த பாதிப்பு பல ஆண்டுகள் நீடித்தது .புது வருட பாடலுக்கு இன்றும் இந்த பாடலை தவிர எந்த மாற்றும் இல்லை என்பதே இந்த பாட்டின் சிறப்பு .

அம்மன் கோவில் கிழக்காலே’ என்ற கிராமத்து பாட்டு . ‘கட்டவண்டி கட்டவண்டி கடையாணி கழண்ட வண்டி’ என்று அம்பிகா பாடும் ஒரு சவால் பாடல். ‘கட்டவண்டி கட்டவண்டி காப்பாத்த வந்தவண்டி’ என்று கமலுக்கு ஒரு பழிவாங்கல் " பாடல். இரண்டுமே வண்டியை மையமாகக் கொண்ட பாடல்." வண்டி வண்டி என்று முடியும் வகையில் எழுதப்பட்டிருக்கும், இந்த பாடலின் பல அர்த்தங்களை 90"S கிட்ஸ் இப்போது புரிந்து கொண்டு யூடியூபில் சிலாகித்து(கலாய்த்து) வருகிறார்கள் .

இசை ஞானி இளையராஜாவிற்கு இது இன்னொரு அன்னக்கிளி . படம் அனைத்துமே ஹிட் அடித்தது ‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்’ பாடல் ஒரு ரகம். கனவு பாட்டு என்றாலும் பல ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பாடல் . இந்த படத்திற்கு பிறகு நடிகை அம்பிகா தமிழ் திரை உலகின் உச்சத்தை எட்டி பிடித்தார். 

அதே ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ஓடி போன மனைவியாக அம்பிகா நடித்த எங்கேயோ கேட்ட குரல் " இந்த படத்தின் பெரும் வெள்ளத்திலும் 100 நாட்கள் என்ற கறை சேர்ந்தது ஆச்சர்யம்.

‘நேத்து ராத்திரி யம்மா’ இன்னொரு ரகம்.படத்தில் சிலுக்கும் கமலும் போட்ட ஆட்டம் ரசிகர்களை திரைஅரங்கிலும் ஆட்டம் போட வைத்தது . இந்த பாடல் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா அனைத்து பாராட்டுகளையும் அள்ளி கொண்டார். 

காமெரா மேன் பாபு ,கிளைமாக்ஸ் சீனில் தீப்பற்றி எரியும் வீட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் இவருக்கு நல்ல பேரை பெற்று தந்தது. எஸ் பி முத்துராமன் திறமையான பொழுதுபோக்கு இயக்குனர் என்ற முத்திரையை பச்சக்" என்று குத்திக்கொண்டார் .

காமெடிக்கு வீகே ராமசாமி தேங்காய் ஸ்ரீனிவாசன் கலக்கு கலக்கி ,இரட்டை அர்த்த மகேந்திரனை பின்னுக்கு தள்ளி இருப்பார்கள் .

படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆக்டர் கமலஹாசன் ஸ்டார் கமலஹாசன் ஆனதை கமல்ஹாசனே மகிழ்ச்சி கொள்ளவில்லை . படம் வெற்றி என்றாலும் தமிழ் திரைப்பட உலகின் ஆரோக்கிய பாதையை துரதிர்ஷ்டமாக சகலகலா வல்லவன் "மாற்றி விட்டது என்று கவலை கொண்டார் . அதை வெளிப்படையாக பத்திரிகைளில் பேட்டியும் அளித்தார் .

படத்தின் வெற்றிக்கு ஏவிஎம் எப்போதும் போல் விளம்பரத்தில் தூக்கி முட்டு கொடுத்தது . ஒவ்வொரு தியேட்டர் உரிமையாளர்கள் அவர்கள் புகைப்படத்துடன் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தறிகெட்டு ஓடுவதை தினசரிகளில் சொல்ல வைத்தனர் . விழுப்புரத்தில் கூட்ட நெரிசலில் போலீஸ் அடி தடி .. வரலாறு காணாத கூட்டம் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

நான் பள்ளியில் படித்துக்கொண்டிரும்போது இந்த படம் தியேட்டர் அலங்காரில் வெளியானது இன்றும் என் நினைவில் உள்ளது . அது மட்டுமல்ல ஜீன்ஸ் பாண்ட் 'டிற்கு பிறகு அப்போது நவீன ஸ்டோன் வாஷ் பேண்டும் கட்டம் போட்ட செக்கெட் சட்டையும் போட்டு இருந்தேன் . அலங்காரில் எப்போதும் வெஜிடபிள் கட்லெட் சுவையாக இருக்கும் . அதையும் சாப்பிட்ட நினைவு உள்ளது .

அதைவிட படத்திற்கு பிறகு எப்போதும் அம்பிகா நினைவாகவே இருந்ததை இந்த பதிவில் நான் சொல்வதற்கில்லை.

Selvamani

Leave a Reply