• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விசா காலாவதி குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட ஐக்கிய அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா காலாவதியான பின்னரும் தங்க நேரிடும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான அபராத கட்டணம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய தகவலை அறிவித்துள்ளது. இதில் குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள், சுற்றுலா விசா வைத்திருப்போர் ஆகியோர் இனி விசா காலாவதியான பின்னரும் தங்க நேரிட்டால் 100 திர்ஹாம் அபராதத்திற்கு பதிலாக இனி நாளும் 50 திர்ஹாம் செலுத்த நேரிடும் என அறிவித்துள்ளனர்.
  
மேலும் எளிதான விசா நடைமுறைக்காக இணையமூடாகவோ, குறிப்பிட்ட அரசு அலுவலகங்களையோ அணுகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டுமின்றி, விசா வழங்குதல், நீட்டிப்பு அல்லது ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்களுக்கான சேவைக் கட்டணங்களைச் சரிபார்ப்பதன் மூலம், விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து தகவலறிந்து தேவையற்ற தாமதங்கள் அல்லது அபராதங்களைத் தவிர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், விண்ணப்பதாரர்கள் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளம், நிர்வாகத்தின் ஸ்மார்ட் செயலி, துபாய் நவ் செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அச்சிடும் மையங்கள் மூலம் நுழைவு அனுமதி மற்றும் விசாக்களுக்கான கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். 

Leave a Reply