• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தகக் கதைகள் மூலம் உருவாக்கப்பட்ட 6 படங்கள்

சினிமா

தமிழில் வெளியான படங்களில் பொன்னியின் செல்வன், பரதேசி போன்ற கதைகள் புத்தகத்தில் இருந்து படமாக்கப்பட்டது என அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு சில படங்கள் புத்தகத்தில் இருந்து எடுத்திருந்தாலும் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. அப்படித்தான் இந்த ஆறு படங்களும் புது கதைகளாக வெளிவந்து பின்னர், படமாக எடுக்கப்பட்டு இருக்கிறது.
  
ஆடுகளம்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் ஆடுகளம். இந்த படம் தனுஷுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது. மேலும் தனுஷுக்குள் இருக்கும் நடிப்பு அரக்கனை வெளியில் கொண்டு வந்த படமும் இதுதான். சேவல் சண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் புத்தகத்தின் தழுவலாக வெளியானது.

சில்லு கருப்பட்டி: சமீபத்தில் ரிலீஸ் ஆகி சினிமா ரசிகர்களிலேயே நல்ல பாசிடிவ் விமர்சனங்களை பெற்ற படம் தான் சில்லு கருப்பட்டி. ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் காதல் அனுபவங்களை மையமாக வைத்து இதன் திரைக்கதை வெளியாகி இருந்தது. இந்த படமும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை தான்.

காதல் கோட்டை: நடிகர் அஜித்குமார் மற்றும் அவருடைய தேவயானிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் காதல் கோட்டை. இந்த படத்தில் காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதலிப்பது போலவும், படத்தின் கிளைமாக்சில் தான் இவர்கள் நேரில் பார்த்து சேர்வது போலவும் இருக்கும். இந்த படமும் புத்தகக் கதை தான்.

அரவான்: அரவான் என்னும் கடவுளை வணங்கும் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் தங்களுக்குள் வைத்திருக்கும் கோட்பாடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்தில் நடிகர்கள் ஆதி மற்றும் பசுபதி தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.

ஆரண்ய காண்டம்: இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் ஆரண்ய காண்டம். இந்த படத்தில் ஜாக்கிஷெராஃப், ரவி கிருஷ்ணா, சம்பத்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிலேயே நல்ல விமர்சனத்தை பெற்று, இன்றுவரை ரசிகர்களின் பேவரைட் படமாகவும் இருக்கிறது.

விக்ரம் வேதா: புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்திற்கு ஜெய் பீம் படம் நடிகர் மணிகண்டன் வசனம் எழுதியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது. 

Leave a Reply