• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நவீன தமிழ்நாட்டின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில்...

சினிமா

வடசென்னை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ்ச் சமூகத்துக்காக தன்னார்வத்தோடு உழைக்கும் பெருமக்களை சிறப்பித்து வருகிறோம்.

அந்தவகையில், பகுத்தறிவுச் சிந்தனையாளர், திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் அவைத்தலைவர் அ.இல.சிந்தா திராவிடன் அவர்களின் பணியைப் பாராட்டி இன்று (07.08.2023) 'முத்தமிழறிஞர் கலைஞர் விருது' வழங்கி சிறப்பித்தோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளில், அவர்தம் நினைவிடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அ.இல.சிந்தா அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.

உடன், வடசென்னை தமிழ்ச் சங்கத் தலைவர் எ.த.இளங்கோ, இணைச் செயலாளர் ப.மனோகரன் மற்றும்  சாய் சச்சின் Sai Sachin ஆகியோர் உள்ளனர்.

- வடசென்னை தமிழ்ச் சங்கம்
97910 97389.
#கலைஞர்100

Leave a Reply