• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உச்சத்தை தொட்டுள்ள வெப்பம் - 76 % சிறுவர்களுக்கு பாதிப்பு

இலங்கை

யுனிசெஃப் மதிப்பாய்வின்படி, ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலை தாக்கத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 460 மில்லியன் சிறார்கள் அதிக வெப்பநிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக தெற்காசியாவில் 4 சிறார்களில், 3 பேர் ஏற்கனவே அதிக வெப்பநிலைக்கு ஆளாகியுள்ளனர். உலகளவில் ஜீலை மாதம் இதுவரையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பமான மாதமாகும்.

தெற்காசியாவில் உள்ள நாடுகள் தற்போது உலகில் அதிக வெப்பமானவை அல்ல,ஆனால் தெற்காசியாவில் நிலவும் வெப்பம், மில்லியன் கணக்கான பாதிக்கப்படக்கூடிய சிறார்களின் உயிருக்கு ஆபத்தான அபாயங்களைக் கொண்டுவருவதாக யுனிசெஃப் இன் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் சஞ்சய் விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக சிறார்களிடையே நோய்கள் பரவக்கூடிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்காரணமாக தாய்மார்கள் சிறார்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

தசைவலி, வாந்திபேதி, தூக்கமின்மை, அதிக தூக்க கலக்கம், மற்றும் பசியின்மை போன்றன ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், நீர் அருந்தாமல் சிறுவர்கள் பாடசாலை உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்லும் போது, அவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாக நேரிடும்.

இதனை தவிர்த்து கொள்ளவதற்காக, அதிக நீரை அருந்துதல், இளநீர், தோடம்பழம், மற்றும் எலும்பிச்சை உள்ளிட்ட பானங்களை எடுத்துக்கொள்வது போன்ற அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், அதிக வெப்பம் நிலவும் பிரதேசங்களில், நாளாந்தம் சிறுவர்களை 20 நிமிடங்களாவது நீரில் வைக்குமாறும், இதனூடாக சரும நோய்களை தவித்துக்கொள்ள முடியும் எனவும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply