• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிக தண்ணீர் குடித்தால் உயிருக்கு ஆபத்தா... 

சினிமா

பொதுவாக மருத்துவர்கள் எல்லோரும் முதலில் சொல்லும் அறிவுரை நிறைய தண்ணீர் குடியுங்கள் என்பதுதான்.. ஏன் எனில், நாம் யாருமே நம்முடைய உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதே இல்லை. அதனால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.

இந்த நீர்ச்சத்து குறைபாடு தான் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. ஆனால் அதே தண்ணீரை ஓரளவுக்கு மேல் லிட்டர் லிட்டராக குடித்துக் கொண்டே இருப்பதும் சில சமயங்களில் ஆபத்து தான் என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

சிலருக்கு இயல்பாகவே நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் சிலர் திடீரென காரணமே இல்லாமல் தண்ணீர் குடிப்பது நல்லது என்பதாலேயே அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது உண்டு.

அப்படி குடிக்கும்போது அது நம்முடைய உடலுக்குத் தேவையான அளவை விட அதிகமாக இருப்பதும், ஓவர் ஹைட்ரேட்டிங்காக இருப்பதை கீழ்வரும் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். 

குமட்டல் மற்றும் வாந்தி, தலைவலி, கிட்னியில் ஏற்படும் அழுத்தம், சருமத்தின் நிறத்தில் நிறைய மாற்றங்கள்.

உடலுக்குத் தேவையான அளவைக் காட்டிலும் தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அதில் சோடியம் இருக்கும். இதனால் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கும். இப்படி உடலில் சோடியத்தின் அளவு அதிகமாக இருப்பதை தான் ‘ஹைப்போநேட்ரீமியா’ என்று அழைப்பா்.

இந்த நிலை அதிகமாகும்போதும் தீவிரமாகும் போது இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

​உடலில் தேவையான அளவுக்கு மேல் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் உள்ள அதிகமான அளவு சோடியம் நீர்த்துப் போன பிறகு, அது உடலின் எல்லா இடங்களிலும் சோடியம் பரவ ஆரம்பிக்கும். இப்படி ஆகும்போது ரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை வெளியேற்றி விடும். இதனால் தசை பிடிப்பு மற்றும் தசைகளில் வலி ஆகியவை உண்டாகும். ​

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரும் அடிக்கடி வெளியேறும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது என்பது நம்முடைய சீறுநீரகம் ஓய்வே இல்லாமல் அதிகமாக வேலை செய்து கொண்டே இருக்கிறது என்று அர்த்தம். இது அடுத்தக்கட்டமாக உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். ​

இது கேட்க புதிதாக இருக்கலாம் நீர்ச்சத்து பற்றாக்குறை எப்படி மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை உண்டாக்குகிறதோ அதேபால தண்ணீர் அதிகமாக இருந்தாலும் டயேரியா உண்டாகும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது உடலில் உள்ள பொட்டாசியம் அளவு குறைந்து கொண்டே போகும். இதனால் டயேரியா உண்டாகும்.

அதனால், தாகம் தீர்க்க அளவாக தண்ணீர் குடியுங்கள். வயிறு முட்ட தண்ணீர் குடிப்பதை தவிருங்கள்.
 

Leave a Reply