• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளியாகும் முன்பே கோடிக்கணக்கில் வியாபாரம் போன ஜெயிலர்

சினிமா

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தற்போது இருக்கிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜெயிலர் படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அடுத்த வாரம் படம் தியேட்டர் ரிலீஸ் என்பதால் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிவிட்டது.
  
ஜெயிலர் படம் இந்தியா முழுக்க ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஒப்பிடும் பொழுது பெங்களூரில் இந்த படத்தின் அட்வான்ஸ் புக்கிங்ற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐயங்காரன் ஃபிலிம்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 30 கோடிக்கு வாங்கி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

மற்ற நடிகர்களை ஒப்பிடும் பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு என்று ரசிகர் மன்றங்கள் வைக்கும் அளவிற்கு வரவேற்பு இருக்கிறது. முத்து படத்தில் இருந்து ஜப்பான் நாடு ரஜினிகாந்தின் கோட்டையாக மாறிவிட்டது. இந்திய சினிமா படங்களை ஒப்பிடும் பொழுது ரஜினிக்கு தான் அங்கு வரவேற்பு அதிகம்.

தற்போது ஜப்பானில் தாண்டி மற்றொரு நாட்டில் ஜெயிலர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்ததில் இருந்தே அமெரிக்கா தான் முன்னிலையில் இருக்கிறது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கிட்டத்தட்ட நான்கு கோடி வரை இந்த படத்தின் டிக்கெட் புக் ஆகி இருக்கிறது.

அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளின் புக்கிங்கை மொத்தமாக கணக்கிடும் பொழுது ஆறு கோடி வரை வசூல் ஆகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை ஓவர்சீஸ் புக்கிங் மட்டும் பத்து கோடியாகும். படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் இந்த வசூல் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 கோடியை தாண்டும் என சினிமா புள்ளிகள் கணித்திருக்கிறார்கள்.

ஜெயிலர் படத்தின் முதல் நாள், முதல் ஷோ மற்ற மாநிலங்களில் காலை ஆறு மணிக்கும் தமிழ்நாட்டில் ஒன்பது மணிக்கும் ஆரம்பமாகுவதாக தற்போதைக்கு தகவல்கள் உறுதியாகி இருக்கிறது. இனிவரும் நாட்களில் இதில் மாற்றங்கள் வரவும் வாய்ப்பு இருக்கிறது. ரஜினி வெளிநாடு பிசினஸ்களிலும் தான் நம்பர் ஒன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார். 
 

Leave a Reply