• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சந்திரயான் 3 எடுத்த நிலவின் முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

இந்தியா

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவை சுற்றத் தொடங்கியது. சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான்- 3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சந்திராயன் 3 எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. புவி சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு மாறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இதுவாகும்.

இம்மாத இறுதியில் நிலவை சென்றடையும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply