• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டன் விபத்தில் உயிரிழந்த இலங்கையின் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்

கனடா

லண்டன் விபத்தில் மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளரும் , பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவருமான விமல் சொக்கநாதன் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் இலண்டனில் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
  
மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக சென்றபோது மின்வண்டி மோதியதால் துன்பியல் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.

இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் மறைந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மரணம் தமிழ் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply