• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரு முக்கிய நாடுகளில் மாபெரும் தொழிற்சாலைகளை கட்டிவரும் ஈரான்

ஆளில்லா ட்ரோன் விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ஈரான் கட்டி வருகிறது. பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ஆளில்லா ட்ரோன் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளை ஈரான் கட்டி வருவதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  
இதன் மூலம் உக்ரைன் போருக்கு தேவையான ட்ரோன்களை ரஷ்யா எளிதாக பெற முடியும் என்றும், ஈரானுக்கு உடனடி பொருளாதார மற்றும் ராணுவ நலன்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

பெலாரஸ் மற்றும் ரஷ்ய அரசாங்கத்துடன் நீண்ட கால மூலோபாய ஒப்பந்தங்களில் ஈரான் கையெழுத்திட்டு இருப்பதாக ISW குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தம் இருதரப்பிற்கும் பலன்களை கொடுக்க கூடிய வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸில் ட்ரோன் தொழிற்சாலைகளை ஈரான் அமைப்பதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ரஷ்யாவிற்கு ட்ரோன்களை கொண்டு வருவதில் இருக்கும் தளவாட சிக்கல்கள் முழுமையாக நீக்கப்பட்ட உள்ளது.

ரஷ்யாவிற்கு ட்ரோன்களை விற்பனை செய்வதன் மூலம் ஈரானுக்கு பெரும் அளவிலான பொருளாதார நன்மைகள் கிடைக்க உள்ளது, அத்துடன் ட்ரோன்களுக்கு மாற்றாக ரஷ்யாவிடம் இருந்து ரஷ்ய Su-35 போர் ஜெட் விமானங்களை ஈரான் மாற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Reply