• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு அளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சு கிடையாது வீச்சுதான்- கவனம் ஈர்க்கும் ஜெயிலர் டிரைலர்

சினிமா

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Leave a Reply