• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு நாள் யாரோ

சினிமா

கே.பாலச்சந்தர்  இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த். அவருக்கு சிறிய வேடம் என்பதால் ஏமாற்றமானாராம்.
பிரபல பத்திரிகையாளர் டி.ஏ.நரசிம்மன் இவ்வாறு எழுதியுள்ளார்.
-எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாகப் பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருந்த நேரம்… ஏவிஎம் நிறுவனம் புதிய படம் ஒன்றில் தங்களை ஒப்பந்தம் செய்ய அணுகியது. படத்தில் நீங்கள் கதாநாயகி என்று மட்டும்தான் தங்களிடம் முதலில் கூறப்பட்டது. படத்தின் இயக்குநர் அப்போது பெரிய ஜாம்பவான் இல்லையென்றாலும், அதற்குரிய தகுதிகள் அவருக்குத் துளிர் விட்டுக்கொண்டிருந்தன.
அவர் நல்லவர்தான்… திறமை யானவர்தான்… பின்னாளில் பல சாதனை யாளர்களை அறிமுகப்படுத்தியவர்தான். ஆனால், ‘தனது படைப்பாற்றலுக்கு மட்டுமே அந்த இயக்குநர் முக்கியத்துவம் கொடுப்பவர். கலைஞர்களின் உணர்வுகள் அவருக்கு இரண்டாம் பட்சம்தான்’ என்று சிலர் குற்றச்சாட்டு கூறுவதுண்டு.

தனது மகள் பெரிய நிறுவனத்தின் கதாநாயகி என்னும் மலைப்பில் கதையைக் கேட்காமல் சம்மதித்து விட்டார் உங்கள் தாய் சந்தியா. தாங்களும் அந்த இயக்குநரின் திறமைகளை பற்றி அறிந்திருந்ததால், கொடுக்கப்பட்ட பணியை சீரிய முறையில் செய்து வந்தீர்கள். இருப்பினும் மனதில் சிறு நெருடல்.
எம்.ஜி.ஆர். படங்களில் ஆட்டம் பாட்டம், கண்ணீர், காதல், கிண்டல், கேலி, என்று நவரசங்களை கொட்டித் தீர்த்த நிலையில்… படம் ‘மேஜராக’ இருந்தாலும்…நீங்கள் மைனர் முக்கியத்துவத்துடன் மட்டுமே நடத்தப்படுவதாக உணர்ந்தீர்கள்!
ஆனால், இதுகுறித்து இயக்குநரிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவரும் ‘இதுதான் கதை’ என்று உங்களிடம் சொல்லவில்லை. மொத்தத்தில் எம்.ஜி.ஆர். படங்களில் உங்களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்படத்தில் இல்லாத ஒரு நிலை. இதனால் உங்கள் ‘இமேஜ்’ பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் உங்களுக்கு. இருந்தாலும் ‘ஒருநாள் யாரோ…என்ன பாடல் சொல்லித் தந்தாரோ…’ என்று இயக்குநர் சொன்னபடி சோக கீதம் பாடி நடிக்கத்தான் செய்தீர்கள்!
திடீரென்று ஒருநாள், ‘தற்கொலை காட்சியில் நடிக்கத் தயாராகுங்கள்’ என்று உங்களிடம் கூறப்பட்டது. திடுக்கிட்டுப் போனீர்கள். ‘‘என்ன சொல்கிறீர்கள்? இதுவரை பெரிதாக காட்சிகள் ஒன்றும் எனக்குத் தரப்படவில்லையே? அதற்குள் கதாநாயகி தற்கொலை செய்து கொள்கிறாளா…?’’ என்று அயர்ந்துபோய் கேட்டீர்கள்.
‘‘கதைப்படி நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். storyline is director’s prerogative…’’ என்று உங்களுக்குக் கூறப்பட, தங்களின் தன்மானத்திற்கு அந்த இயக்குநரால் ஒரு சவால் விடுக்கப்பட்டதாக நினைத்தீர்கள். உங்கள் கண்களில் உணர்வுகள் உறைந்து போயின.
வறண்ட புன்முறுவலுடன் இயக்குநரை நோக்கி ஆங்கிலத்தில் பதில் தந்தீர்கள்…
‘‘Oh! Is that so? Well…go ahead and kill me soon! So…when I am dead, there won’t be any need for you in future to come to me offering roles. Thank You!’’
…என்றபடி தங்கள் காரை நோக்கி நடந்து போனீர்கள். ஒப்புக்கொண்டபடி, அந்த தற்கொலை காட்சியில் நடித்தும் தந்தீர்கள். அதன்பின், அந்த இயக்குநரின் படங்களில் நீங்கள் நடிக்கவே இல்லை. உங்கள் தன்மானத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவும் இல்லை.-
பெண்களின் மனதில் ஆசைக்கும் நாணத்திற்கும் இடையில் எப்போதும் நடக்கும் போராட்டத்தை மிக அழகாக சொல்லியிருப்பார் வாலி.
“மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை”
குமார் எப்பவுமே தான் இசையமைத்த படங்களில்  முதல் பாடலை சுசீலாம்மா பாட வேண்டும் என்று விரும்புவார்.
சுசீலாம்மா குரலில் இந்த பாடலை கேட்பதில்தான் எத்தனை எத்தனை மயக்கம்.

Natarajan Venkatraman

Leave a Reply