• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெண்ணிறாடை நிர்மலா

சினிமா

இந்த பெயரை இன்றைய காலகட்டத்தில் இருப்பர் நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் ஆனால் 60, 70களில் மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்றவர் இவர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிறாடை என்ற படத்தின் மூலம் 1965இல் திரைக்கு அறிமுகமாகிறார் இந்த படத்தில் தான் ஜெயலலிதா வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோரும் அறிமுகமாகிறார்கள் அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் 
கும்பகோணத்தைச் சேர்ந்த ராமநாதன் மற்றும் ருக்மணி தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் சிறந்த பரதநாட்டிய கலைஞர், எழுத்தாளர், நடிகர் பன்முக தன்மை பெற்ற ஒருவர் 

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று இவர் நடிகர் எம் ஜி ஆரின் குட் புக்கில் இடம்பெற்ற வெகு சிலரின் ஒருவர்
 இவருடைய நாட்டியத்தால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது பாரதி பற்றிய நாட்டிய நாடகம் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற போது அதில் இவருக்கு முக்கிய பங்கு வழங்கியவர்
 இவர் எம்ஜிஆர் படங்களில் அதிகம் நடித்துள்ளார் மேலும் சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகியோருடனும் நிறைய படங்களில் நடித்துள்ளார் 
குறிப்பிட தகுந்த படங்கள் என்றால் வெண்ணிற ஆடை, காதலித்தால் மட்டும் போதுமா, மன்னிப்பு ,பாபு உனக்காக நான் ,நினைத்ததை முடிப்பவன் ,ரகசிய போலீஸ் 115, தங்கைக்காக ,தங்கச் சுரங்கம் ,லட்சுமி கல்யாணம் 
போன்ற 200க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியவர் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸாக சில தமிழ் படங்களில் நடித்தார் பிரகாஷ்ராஜுடன் நடித்த தயா படம் அதில் ஒன்று மேலும் இவர் தெய்வமகள் மேலும் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் என்ற படத்திலும் தோன்றியிருப்பார் 
தெய்வமகள் ,அண்ணி போன்ற டிவி தொடர்களிலும் நடித்தவர் 
ஒரு நடனப்பள்ளி நடத்தி வருகிறார் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடனம் பயிற்று வருகிறார்
 அது மட்டுமல்ல லாக்டவுன் பீரியட் சமயத்தில் அந்த நாட்களை வீணாக்காமல் ஹிந்தியில் இருந்து ஒரு புத்தகத்தை தமிழில் மொழி மாற்றி எழுதியுள்ளார்
 மேலும் ஒரு முக்கியமான செய்தி இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை 73 வயதானபோதிலும் இன்னும் தனிமையிலேயே இருக்கிறார்
 காரணம் இவருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக அடிக்கடி அவர் இவரை வேகமாக நடந்து கீழே விழுந்து விடாதே காயம் பட்டு கொள்ளாதே பிறகு உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது போன்று தொடர்ந்து கூறி வந்ததால் இவர் அதன் மீது வெறுப்பு வந்ததாக கூறுகிறார் ஒரு மாறுபட்ட காரணம்தான்
 இவர் எம்ஜிஆரிடம் நன்மதிப்பைப் பெற்று இருந்ததால் தமிழகத்தில் அன்று இருந்த மேலவைக்கு நியமிக்கப்பட்ட போது இவர் மீது சொத்து  வழக்கு ஒன்று வழக்காடு மன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது 
அதன் காரணமாக பின்னர் மேலவையே கலைக்கப்பட்டது என்பது வரலாறு 
இவர் முதன் முறையாக ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து போடி தொகுதியில் ஜானகி அணியின் சார்பில் நிறுத்தப்பட்டு தோல்வியடைந்தார் 
இன்னும் சுறுசுறுப்பாக நடனப்பள்ளி நடத்தி வரும் இவர்
 நீண்ட காலம் வாழ்ந்து தன்னுடைய கலைச் சேவையை தொடர வேண்டும்

Vedanthadesikan Mani Lion

Leave a Reply