• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலமாக நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 19,000 கைதிகள் சந்தேக நபர்களாகவும், 10,000 பேர் கைதிகளாகவும் மொத்தம் கிட்டத்தட்ட 29,000 கைதிகளாக உள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், மேலதிக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 200 வீதமாக அதிகரித்துள்ளது என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் 20 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர், விஜயதாச ராஜபக்ஸ கூறியுள்ளார்.

சிறைக்கைதிகளின் உணவு தேவைக்காக மாத்திரம் வருடாந்தம் 5.5 பில்லியன் ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply