• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையகம் 200 - நடைபவனி புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பம்

இலங்கை

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதனை நினைவு கூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி, இன்று புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகியது.

மன்னார் முதல் மாத்தளை வரை என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபவனி காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது.

குறித்த நடைபயணத்தில் மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் பங்குபற்றுதலோடு, மத குருக்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நடைபவனியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆதரவை வழங்கும் விதமாக தாய்த் தமிழ் பேரவையினால் தாக சாந்தி வழங்கி வைக்கப்பட்டது.

தமது போராட்டம், சிறந்த அங்கீகாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை, ஊதியம், வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்கள் என்பனவற்றை வலியுறுத்தியே இந்த நடைபவனி இடம்பெறுகின்றது.
 

Leave a Reply