• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையகம் மறுசீரமைக்கப்படும் - அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய விஜயத்தின் போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 750 மில்லியன் இந்திய ரூபாவை மானியமாக வழங்குவதாக அறிவித்தது.

மலையக மேம்பாட்டுக்கு என இந்தியாவினால் அறிவிக்கப்பட்ட இந்த நிதி கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் வாழ்வில் அழகியல் மாற்றத்திற்காக இல்லமால் வாழ்வியலுக்காக இந்த மானியத்தை பயன்படுத்த விரும்புகிறோம் என்றும் நீண்ட காலத்திற்கான நிலைமைகளை உருவாக்குவது முக்கியம் என்றும் கூறினார்.

தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமைச்சர் தொண்டமான், குழந்தைகள் காப்பகங்களை தரம் உயர்த்துவது, தொழிலாளர்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் மருந்தகங்களை அபிவிருத்தி செய்வது மற்றும் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்தையும் கோடிட்டுக் காட்டினார்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் கட்டப்பட்ட 50,000 வீடுகளைத் தவிரமலையக தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்காக 14,000 வீடுகளை அமைப்போம் என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

இதேநேரம் தனிப்பட்ட முறையில், மலையக மக்களுக்கான நில உரிமையை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்,

ஜூலை 21 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புகளில், சுமார் 9 மில்லியன் அமெரிக்க டோலர்களில் இந்த மானியம் அடங்கும்.

அபிவிருத்தி முன்முயற்சிகளின் போக்கை தீர்மானிக்க, எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தின் கருத்துக்களையும் அமைச்சு கலந்தாலோசிக்கும் என்றும் ஜீவன் தொண்டமான் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லி பயணத்தின் பொது தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதனைத் தொடர்ந்து சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, கல்வியில் முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply