• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடமராட்சியில் இருந்த  திண்ணை பள்ளிகூடங்கள் 

இலங்கை

வடமராட்சியில் இருந்த  திண்ணை பள்ளிகூடங்கள் பற்றி  பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் எழுதியவற்றின் ஒரு பகுதி கீழே திண்ணைப்பள்ளிகள்
அக்காலக் கல்விப் பாரம்பரியத்தின் முக்கிய நிறுவனமான திண்ணப் பள்ளிகளின் அமைப்பினையும் ஆசிரியர் மாணவர் உறவினையும் நோக்கும் பொழுது, பள்ளிக்கூடம் ஆசிரியரின் வீட்டிலோ, அல்லது அவ்வூர்ப் பெரியவரின் வீட்டிலோதான் அமைந்திருந்தது
. ஆசிரியர் தனியாக அமைந்த திண்ணையில், பலகையில் அல்லது பாயில் அல்லது மான் தோலில் அமர்ந்திருப்பார். 
அவரைச் சூழவுள்ள திண்ணைகளில் பாய் போடப்பட்டிருக்கும். அல்லது நன்கு மெழுகிய திண்ணையாக இருக்கும்.
 மாணவர்கள் வரிசையாக இருப்பார்கள். ஆசிரியர் பாடம் நடத்துவார், பெரும்பாலும் ஆரம்ப வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கே காலையில் வகுப்புக்கள் நடக்கும். மாலையில் இலக்கணம், இலக்கியம். புராணபடனம். சோதிடம் என்பன வளர்த்தவர்களுக்குக் கற்பிக்கப்படும். எழுதிப்படித்தலை விட வாய்மொழியாகக் கேட்டு மனைம் செய்து படித்தலே பெரும்பான்மையாகும். 
வடமராட்சியின் எழுத்தறிவுப் பாரம்பரியம் யாழ்ப்பாணக் குடா நாட்டின் கல்விப் பாரம்பரியத்தினின்றும் வேறுபட்டுள்ளது என்று கூறமுடியாது.
 யாழ்ப்பாணக் குடாநாட்டில் அக்காலத்தில் குருசீட முறையிலேயே கல்வி போதிக்கப்பட்டது. பரம்பரை பரம்பரையாக மரபுவழிக் கல்வி முறையே நிலவிவந்துள்ளது. மற்றைய தொழில்களைப் போலக் கல்வியும் தந்தையிடமிருந்து மகனுக்குப் போதிக்கப்பட்டது.
 இந்த மரபு சிறிது காலம் செல்லத் திண்ணைப் பள்ளிக்கூடங்களாக உருவெடுத்தன எனலாம்.
ஏறத்தாழ 20ஆம் நூற்றாண்டுவரை இத்திண்ணைப் பள்ளி மரபினை வடமராட்சிப் பகுதியிலே காணக்கூடியதாக இருந்தது
. ஐரோப்பியர் வருகையையொட்டி நிறுவனரீதியான ஆங்கில, தமிழ்ப் பாடசாலைகள் நிறுலப்பட்ட பின்னும் இப்பகுதியிலே மிக அண்மைக்காலம்வரை இத் திண்ணைப்பள்ளி மரபு காணப்பட்டது.
 பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு மிக அருகில் (ஓடக்கரை) வெற்றிவேலு வாத்தியாரின் திண்ணைப்பள்ளி 1974 வரை இயங்கிவந்ததை அறிவோம். ஆங்கிலப் பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் இவரிடம் இலக்கணம், இலக்கியம், கணிதம் பயின்றுகொண்டிருந்தனர்.
 பெரும்பாலான மான வர்கள் இவரின் உறவினர்களாகவும் வசதியற்றவர்களாகவுமிருந்ததால் வேதனமின்றியும் இவர் கற்பித்தது உண்டு. வீட்டினுள்ளே நாலுபக்கமும்
 -ஓரளவு உயரமான திண்ணையுண்டு. மாணவர் கீழே இருந்து திண்ணையில் வைத்து எழுதிப் படிப்பர். இவரின் முக்கியத்துவம் மனனம்" செய்விப்பதிலேயே தங்கியிருக்கும், '
நெட்டுரு', 'வாலாயம்' ன்ற பதங்களை அடிக்கடி உபயோகிப்பர். உயர்தர இலக்கிய இலக்கங்களை இவர் போதிப்பதில்லை. பாடத்திட்டத்தோடொட்டியே இவர் யிற்சிகள் நடைபெறும். திண்ணைப் பள்ளியின் எச்ச சொச்சமா இவரின் பள்னியைக் கருதலாம்.
1966 வரை

புலோலியில் கந்தர் முருகேசனின் திண்ணைப்பள்ளி திறம்பட நடந்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் ஆழ்ந்தகன்ற தமிழ் புலமையும், முற்போக்குச் சிந்தனையும் 'நொத்தாரிஸ்' பரீட்சைக்குத் தமிழிலக்கணம் பாடத்திட்டமாக அமைந்திருந்ததும் இவரது திண் ணைப்பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் எனலாம
நன்றி-பேராசிரியர் சிவலிங்க ராஜா
புகைப்படம் -தமிழகத்தின் அல்லது இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் நடந்த திண்ணை பள்ளியாக இருக்கலாம்
 

 

Leave a Reply