• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமர்சிப்பவர்கள் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும்- அகிலவிராஜ்

இலங்கை

விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அதற்கான தீர்வுத் திட்டங்களையும் வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவருமான அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விக்கிரமசிங்க இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது, யாரும் இந்நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை.

ஏனெனில், அவர்களுக்கெல்லாம் சவால்களுக்கு முகம் கொடுக்க தைரியம் கிடையாது. ஜனாதிபதிக்கு மிகவும் சவாலான செயற்பாடுகள்தான் அன்று காணப்பட்டன.

எடுக்க வேண்டிய அனைத்து முடிவுகளையும் கஷ்டங்களுக்கு மத்தியில்தான் அவருக்கு எடுக்க வேண்டிய சூழல் காணப்பட்டது.

ஆனால், நாட்டை முன்னேற்றுவதாயின் அவ்வாறான தீர்மானங்களை எடுத்தே ஆக வேண்டும். சர்வக்கட்சி மாநாட்டில் கலந்து விட்டு, பலரும் பல கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

ஆனால், ஒருவரிடம்கூட, பிரச்சினைகளுக்கான தீர்வுத்திட்டங்கள் கிடையாது. எமக்கு மக்கள் ஆணை இல்லையாம்.

அப்படியானால், மக்கள் ஆணை உள்ள தரப்புக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்கட்டுமே.

நாட்டை பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி சரியாக முன்னெடுத்துச் செல்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியொன்றை விரைவில் நாம் ஸ்தாபிப்போம்.

இந்தக் கூட்டணி தான், நாட்டின் அடுத்த ஆட்சியை கைப்பற்றும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply